"நீட் மசோதாவை கொண்டு சென்றதற்கு நன்றி"... சிரித்த முகத்துடன் ஆளுநருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் பொன்முடி!
சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அனைத்து பல்கலைக்கழகங்களும் மாநில பட்டியலுக்கு கீழ் கொண்டு வரவேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை வைத்து வருகிறோம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 164 பட்டமளிப்பு விழா தற்போது சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு கட்டடத்தில் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருந்தநிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெறுகிறது.
இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் முக ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்பட பலரும் கலந்து கொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்த பிறகு தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உரையாற்றினார். அப்பொழுது பேசிய அவர், தமிழ்நாட்டில் உள்ள சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அனைத்து பல்கலைக்கழகங்களும் மாநில பட்டியலுக்கு கீழ் கொண்டு வரவேண்டும். இதுகுறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆளுநருக்கும், மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார். நானும் கோரிக்கை வைத்து வருகிறேன்.
#JUSTIN | கல்வி மாநில உரிமையில் இருக்க வேண்டும் - அமைச்சர் பொன்முடிhttps://t.co/wupaoCQKa2 | #UniversityofMadras #TNGovt #MKStalin #Ponmudy @mkstalin pic.twitter.com/hvucLhT6TN
— ABP Nadu (@abpnadu) May 16, 2022
குறிப்பாக, இந்தியா முழுவதும் பி.ஏ., பி.எஸ்,சி., போன்ற இளங்கலை பட்டம் படிப்பதற்கு கூட இப்பொழுது நுழைவுத்தேர்வு தேவை என்று கூறுகிறார்கள். நுழைவு தேர்வுகள் தனியார் பயிற்சி நிறுவனங்கள் பெருகுவதற்கும் கொள்ளையடிப்பதற்கும் வழி வகுக்குமே தவிர, அவற்றை ஒழிப்பதற்கு உதவாது. அதைதான் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள், உயர்கல்வித்துறை அதிகாரிகள் சொல்லி கொண்டு இருக்கிறார்கள்.
#JUSTIN | தனியார் பயிற்சி நிறுவனங்கள் கொள்ளையடிக்கவே நுழைவுத் தேர்வுகள் உதவும் - அமைச்சர் பொன்முடிhttps://t.co/wupaoCQKa2 | #UniversityofMadras #TNGovt #MKStalin #Ponmudy pic.twitter.com/EMw48HrXaN
— ABP Nadu (@abpnadu) May 16, 2022
இங்கு நான் தமிழ்நாடு ஆளுநர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டு இருக்கிறேன். நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய மசோதாவை மத்திய அரசிடம் கொண்டு சேர்த்ததற்கு நன்றி என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்