மேலும் அறிய

Minister M. Subramanian: நேரு அரங்கத்திலா அறுவை சிகிச்சை செய்யமுடியும்? விமர்சனங்களுக்கு பதில் கேள்வி கேட்ட அமைச்சர் மா.சு

எதிர்க்கட்சியினர் இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்டால்தான் அதன் தீவிரம் தெரியும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம் செய்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செய்யப்பட்ட  அறுவை சிகிச்சையை விமர்சிக்கும் எதிர்கட்சியினர் அவர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்துக் கொண்டால் தான் அதன் தீவிரம் தெரியும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம் செய்துள்ளார். வெளிப்படைத்தன்மையுடன் இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என எதிர்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவிப்பதற்கு நேரு ஸ்டேடியத்தில் வைத்து 15 ஆயிரம் பார்வையாளர்கள் முன்னிலையில் பண்ண முடியுமா என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று 100 இடங்களில் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும்  10 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடைபெறுகிறது. இந்த முகாமில் சிறப்பு மருத்துவர்கள், பொது மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மருத்துவர்கள், மகளிர் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவர்கள் உள்ளனர். இந்த முகாமில் தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்கான புதிய பயனாளிகளும் பதிவு செய்யப்பட உள்ளனர். 

இந்த நிலையில் சென்னை கோடம்பாக்கம் புலியூர் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதற்குப் பிறகு அங்கு நடைபெற்ற வரும் மருத்துவ சேவைகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்த போது, ”கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில் 103 முகாம்கள் நடைபெற்று வருகிறது.  மக்கள் தேவைக்கேற்ப அந்தந்த இடங்களில் 103 இடங்களில் நடைபெற்று வருகிறது. 2000 மேற்பட்டோர் ஒவ்வொரு முகாமிலும் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒரு முகாமில் 2000 பேர் பயன்படுத்தினால் பல்லாயிரம் நபர்கள் இதன் மூலம் பயன்பாடுவார்கள். ஒவ்வொரு முகமும் 60 முதல் 70 மருத்துவர்கள் பணியாற்று வருகின்றனர். முதல் முறையாக இந்த துறையின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. Icon திட்டம் என்ற வகையில் கடந்த 15ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை தொடங்கப்பட்டது. அதுமட்டுமின்றி விரைவில் இளம் சிறுவர்களுக்கான கண்ணொளி முகம் தமிழகம் முழுவதும் 100 இடங்களில் நடைபெற உள்ளது.

1959 ஆம் ஆண்டு கலைஞர் அவருடைய சொந்த ஊரில் சொந்த செலவில் அவருடைய தாய் தந்தை பெயரில் மருத்துவ கட்டமைப்பை உருவாக்கினார்.108 திட்டம், கலைஞர் காப்பீட்டு திட்டம், வரும் முன் காப்போம் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை கலைஞர் கொண்டு வந்துள்ளார்.  மருத்துவமனை இருக்கும் இடத்திற்கு மக்கள் சென்றார்கள். திமுக அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு மக்கள் இருக்கும் இடத்திற்கு மருத்துவ உபகரணக் கொண்டு சென்று பரிசோதனை செய்து அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டிருக்கிறது. இன்னுயிர் காப்போம் 48 என்ற திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. 1,67 லட்சம் நபர்களுக்கு இந்த திட்டம் மூலம் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவரின் கண்காணிப்பில் உள்ளார் சிறைத்துறை காவலர்கள் அனுமதி உடன் அவர்களுக்கு குடும்பத்தினர் பேசி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செய்யப்பட்ட  அறுவை சிகிச்சையை விமர்சிக்கும் எதிர் கட்சியினர் அவர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டால் தான் அதன் தீவிரம் அவர்களுக்கு தெரியக்கூடும். வெளிப்படைத்தன்மை உடன் இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனில் நேரு ஸ்டேடியத்தில் வைத்து 15 ஆயிரம் பார்வையாளர்கள் முன்னிலையில் பண்ண முடியுமா?” என மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Embed widget