Minister DuraiMurugan: பிடிகொடுக்காத கர்நாடகா அரசு.. டெல்லிக்கு சென்ற துரைமுருகன்.. மத்திய அமைச்சருடன் சந்திப்பு..
மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து பேசினார்.
மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து பேசினார்.
தமிழகத்தில் மீண்டும் காவிரி நதிநீர் பிரச்சனை தலைதூக்க தொடங்கியுள்ளது. கர்நாடகாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதனிடையே ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகா அரசு காவிரி நீரை திறந்து விட வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பாக உள்ளது.
ஆனால் பருவமழை பொய்த்து விட்டதால் காவிரியில் நீர் திறக்க முடியாது என கர்நாடக அரசு சொல்லியிருக்கிறது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலை, தமிழ்நாடு அரசுக்கு இக்கட்டான சூழலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுமானப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என தெரிவித்து வருகிறார். இதுதொடர்பாக த்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்தும் அவர் வலியுறுத்தினார்.
இதனால் காவிரி நீர் பிரச்சினை, மேகதாது அணை கட்டும் பிரச்சினை பற்றி முறையிட மத்திய நீர்வளத்துறை அமைச்சரை இன்று தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது காவிரியின் குறுக்கே மேகதாது அணைக்கட்ட மத்திய அரசு கர்நாடகாவுக்கு அனுமதி தரக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டதாவும், தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கான நீரை கர்நாடகா விரைந்து திறந்து விட அறிவுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை அமைச்சர் துரைமுருகன் சந்திக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.