மேலும் அறிய

TN Assembly: சுங்கச் சாவடிகள் வேண்டாம் - மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.. சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு..

4 வழிச்சாலை அமைத்தாலும் மாநில நெடுஞ்சாலைகளில் டோல்கேட் அமைப்பதில்லை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

ஈரோடு -  கோபிச்செட்டிபாளையம் புறவழி சாலை அமைப்பதற்கான சாத்தியகூறுகள் தயார் செய்ய 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முந்தினம் தொடங்கிய கூட்டம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. முதல் நாள் காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனி தீர்மானத்தை கொண்டு வந்தார். நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் 110 விதியின் கீழ் வரி செலுத்துவது தொடர்பாக சமாதான திட்டத்தை அறிவித்தார். மேலும் 50,000 ரூபாய்க்கு கீழ் வரி நிலுவையில் இருப்பவர்களுக்கு வரி தள்ளுபடி செய்யப்படும் எனவும் தெரிவித்தார். 

மூன்றாவது நாளான இன்று, சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், ஈரோடு - கோபிசெட்டிபாளையம் சாலை மிக குறுகிய சாலைகளாக இருப்பதாகவும், புறவழி சாலை அமைக்க அதிமுக ஆட்சியில் ஆய்வு செய்யப்பட்டது என்றும், பணிகள் தற்போது தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? எனவும் சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, ஈரோடு கோபிசெட்டிபாளையம் சாலை குறித்து தானும் மிகவும் அறிந்தவன் தான் எனவும், புறவழி சாலை அமைப்பதற்கு திமுக ஆட்சியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மொத்தமாக 8.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க சாத்தியகூறுகள் ஆய்வு செய்வதற்காக 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும், அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

அதேபோல் 4 வழி சாலை அமைத்தாலும் மாநில நெடுஞ்சாலைகளில் டோல்கேட் அமைப்பதில்லை என அமைச்சர் எ.வா.வேலு குறிப்பிட்டு பேசியுள்ளார்.

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல் மாலையீடு வரையிலான சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது எனவும் ஆம்புலன்ஸ்கள் , கல்லூரி பேருந்துகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே அந்த சாலையை 4 வழி சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என புதுக்கோட்டை முத்துராஜா கோரிக்கையை முன் வைத்தார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு , 7 மீட்டர் கொண்ட மாநில சாலையை , 10 மீட்டராக்கி தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுகின்றனர். அதில் டோல்கேட் அமைக்கின்றனர் , டோல்கேட்கள் கூடாது என மத்திய அரசுக்கு நாங்கள் தொடர்ந்து கடிதம் எழுதிவருகிறோம்.

முதல்வர் மாநில நெடுஞ்சாலைகள் திட்டத்தின் கீழ் அனைத்து சாலைகளும் 4 வழி சாலையாக்கப்பட்டு வருகின்றன. 4 வழி சாலை அமைத்தாலும் மாநில நெடுஞ்சாலைகளில் டோல்கேட் அமைப்பதில்லை என தெரிவித்தார்.

நகராட்சி சாலை , மாநில சாலை என இரண்டு விதமான சாலைகள் , நகரப் பகுதியில் இருக்கும் , எனவே உறுப்பினர் கூறும் அந்த சாலையை ஆராய்ந்து போக்குவரத்து செறிவு அதிகம் இருந்தால் 4 வழி சாலையாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ வேலு குறிப்பிட்டு பேசியுள்ளார். 

Madhya Pradesh Election 2023: மத்தியபிரதேசத்தில் முடிவுக்கு வரும் 20 வருட பாஜக ஆட்சி? தேர்தல் முடிவுகளை மாற்றும் பிரச்னைகள்

Mylswamy Annadurai: நாள்தோறும் செயற்கைக்கோள்களை ஏவும் நிலை வரும் - மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget