மேலும் அறிய

மேட்டூர் அணையின் நீர்வரத்து தொடர்ந்து சரிவு... வினாடிக்கு 284 கன அடியாக குறைந்தது

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பருவமழை காலம் முடிவடைந்தது, அதன் காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்த வருகிறது. தமிழ்நாடு முழுவதும் குருவை சம்பா சாகுபடி அறுவடைக்கு தயாராக இருப்பதால், டெல்டா பாசத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 491 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 329 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 284 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து தொடர்ந்து சரிவு... வினாடிக்கு 284 கன அடியாக குறைந்தது

நீர்மட்டம்:

அணையின் நீர்மட்டம் 109.83 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 78.16 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91வது ஆண்டாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணை வரலாற்றில் ஒரே ஆண்டில் மூன்று முறை அணை நிரம்பியது இதுவே முதல் முறையாகும்.

இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெற்றது. மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெற்றது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 2,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டது.

கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்ட வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து தொடர்ந்து சரிவு... வினாடிக்கு 284 கன அடியாக குறைந்தது

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 92.97 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 17.78 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 167 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4,338 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 50.38 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 11.38 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 151 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2,150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
ABP Premium

வீடியோ

Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
Embed widget