மேலும் அறிய

Mettur Dan: திடீரென அதிகரித்த மேட்டூர் அணையின் நீர்வரத்து.. இன்றைய நீர் நிலவரம்.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 10 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 22 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 79 கன அடியாக அதிகரித்துள்ளது. 

Mettur Dan: திடீரென அதிகரித்த மேட்டூர் அணையின் நீர்வரத்து.. இன்றைய நீர் நிலவரம்.

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 55 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 21.10 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.

அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur Dan: திடீரென அதிகரித்த மேட்டூர் அணையின் நீர்வரத்து.. இன்றைய நீர் நிலவரம்.

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 85.83 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 13.08 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 78 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 787 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 45.39 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 9.10 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 67 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பொன்முடி மீது சேறு! வேலையை பார்த்தது பாஜக! போலீசில் சிக்கிய முக்கிய புள்ளி! 
பொன்முடி மீது சேறு! வேலையை பார்த்தது பாஜக! போலீசில் சிக்கிய முக்கிய புள்ளி! 
கண்ணுக்கெட்டும் தூரம் வெள்ளம்! தண்ணீரில் மூழ்கிய விழுப்புரம் சாலை! தத்தளிக்கும் மக்கள்! - வீடியோ
கண்ணுக்கெட்டும் தூரம் வெள்ளம்! தண்ணீரில் மூழ்கிய விழுப்புரம் சாலை! தத்தளிக்கும் மக்கள்! - வீடியோ
ஆந்திராவிலிருந்து 26 கிலோ கஞ்சா கடத்தல் - தேனியில் சிக்கிய கேரள நபர்கள்
ஆந்திராவிலிருந்து 26 கிலோ கஞ்சா கடத்தல் - தேனியில் சிக்கிய கேரள நபர்கள்
வாய் துடுக்காக பேசுவதை விட்டுவிட்டு மக்களை காக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் காட்டம்
வாய் துடுக்காக பேசுவதை விட்டுவிட்டு மக்களை காக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் காட்டம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்”உள்துறை குடுங்க, இல்லனா...” பிடிவாதமாக இருக்கும் ஷிண்டே! விழிபிதுங்கி நிற்கும் பாஜகஉதயநிதி முன் தள்ளுமுள்ளு! போர்வையை இழுத்த பெண்கள்! கோபத்தில் கத்திய POLICEAadhav Arjuna : ”திமுக-னா பல் இளிப்பீங்க விஜய்-னா மட்டும் கசக்குதா?” திருமாவை- விளாசும் தவெக! | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொன்முடி மீது சேறு! வேலையை பார்த்தது பாஜக! போலீசில் சிக்கிய முக்கிய புள்ளி! 
பொன்முடி மீது சேறு! வேலையை பார்த்தது பாஜக! போலீசில் சிக்கிய முக்கிய புள்ளி! 
கண்ணுக்கெட்டும் தூரம் வெள்ளம்! தண்ணீரில் மூழ்கிய விழுப்புரம் சாலை! தத்தளிக்கும் மக்கள்! - வீடியோ
கண்ணுக்கெட்டும் தூரம் வெள்ளம்! தண்ணீரில் மூழ்கிய விழுப்புரம் சாலை! தத்தளிக்கும் மக்கள்! - வீடியோ
ஆந்திராவிலிருந்து 26 கிலோ கஞ்சா கடத்தல் - தேனியில் சிக்கிய கேரள நபர்கள்
ஆந்திராவிலிருந்து 26 கிலோ கஞ்சா கடத்தல் - தேனியில் சிக்கிய கேரள நபர்கள்
வாய் துடுக்காக பேசுவதை விட்டுவிட்டு மக்களை காக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் காட்டம்
வாய் துடுக்காக பேசுவதை விட்டுவிட்டு மக்களை காக்க வேண்டும் - ஆர்.பி.உதயகுமார் காட்டம்
Salem Flood: சேலத்தில் கனமழை... சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு!
Salem Flood: சேலத்தில் கனமழை... சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு!
இபிஎஸ்க்கு செக் “வஞ்சக எண்ணம்! வாய் சவடால் வேண்டாம்; இதை முடிந்தால் செய்யுங்கள்” - அமைச்சர் சேகர்பாபு சவால்!  
இபிஎஸ்க்கு செக் “வஞ்சக எண்ணம்! வாய் சவடால் வேண்டாம்; இதை முடிந்தால் செய்யுங்கள்” - அமைச்சர் சேகர்பாபு சவால்!  
Fengal Cyclone Relief: 2 ஆயிரம்! ஃபெஞ்சலால் வந்த சோகத்திற்கு இழப்பீடு - ஆடு, மாடுக்கு எவ்வளவு?
Fengal Cyclone Relief: 2 ஆயிரம்! ஃபெஞ்சலால் வந்த சோகத்திற்கு இழப்பீடு - ஆடு, மாடுக்கு எவ்வளவு?
”பெரும் பரபரப்பு – அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு” விழுப்புரத்தில் மக்கள் ஆவேசம்..!
”பெரும் பரபரப்பு – அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு” விழுப்புரத்தில் மக்கள் ஆவேசம்..!
Embed widget