மேலும் அறிய

Mettur Dam: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு - தற்போதைய நிலவரம் என்ன?

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 2,730 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 2,823 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 2,360 கன அடியாக குறைந்துள்ளது. 

Mettur Dam: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு - தற்போதைய நிலவரம் என்ன?

மேட்டூர் அணை:

அணையின் நீர் மட்டம் 69.22 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 32.03 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur Dam: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு - தற்போதைய நிலவரம் என்ன?

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 97.08 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 20.60 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,064 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 2,821 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 54.85 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 13.65 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 676 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Nobel Prize 2024: மருத்துவத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு; யாருக்கு? எதற்கு?
Nobel Prize 2024: மருத்துவத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு; யாருக்கு? எதற்கு?
Chennai Air Show Death: கேட்டதைவிட அதிக ஏற்பாடு; எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாய் வந்த மக்கள்- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
Chennai Air Show Death: கேட்டதைவிட அதிக ஏற்பாடு; எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாய் வந்த மக்கள்- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
KL Rahul:
KL Rahul:"உதவினா போதும் சார் ஓடி வந்துடுவாரு" - கல்விக்காக பணத்தை அள்ளிக் கொடுத்த கே.எல்.ராகுல்
Breaking News LIVE 7 Oct : மெரினா சாகச நிகழ்ச்சி.. 5 பேர் உயிரிழப்பு வேதனையளிக்கிறது - விஜய், தவெக தலைவர்
Breaking News LIVE 7 Oct : மெரினா சாகச நிகழ்ச்சி.. 5 பேர் உயிரிழப்பு வேதனையளிக்கிறது - விஜய், தவெக தலைவர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanimozhi on Marina Air show : மெரினா உயிரிழப்பு கனிமொழி பகீர் REACTION!யாரை சாடுகிறார்?Air show in Marina : பறிபோன 5 உயிர்கள்! யார் பொறுப்பு?அரசா? விமானப்படையா?Rahul Gandhi : தலித் வீட்டில் சமையல்!Cooking-ல் அசத்திய ராகுல்!நெகிழ வைக்கும் வீடியோAir show in Marina | கொடூர வெயில்! Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்கள்! அடுத்தடுத்து மயங்கிய மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nobel Prize 2024: மருத்துவத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு; யாருக்கு? எதற்கு?
Nobel Prize 2024: மருத்துவத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு; யாருக்கு? எதற்கு?
Chennai Air Show Death: கேட்டதைவிட அதிக ஏற்பாடு; எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாய் வந்த மக்கள்- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
Chennai Air Show Death: கேட்டதைவிட அதிக ஏற்பாடு; எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாய் வந்த மக்கள்- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
KL Rahul:
KL Rahul:"உதவினா போதும் சார் ஓடி வந்துடுவாரு" - கல்விக்காக பணத்தை அள்ளிக் கொடுத்த கே.எல்.ராகுல்
Breaking News LIVE 7 Oct : மெரினா சாகச நிகழ்ச்சி.. 5 பேர் உயிரிழப்பு வேதனையளிக்கிறது - விஜய், தவெக தலைவர்
Breaking News LIVE 7 Oct : மெரினா சாகச நிகழ்ச்சி.. 5 பேர் உயிரிழப்பு வேதனையளிக்கிறது - விஜய், தவெக தலைவர்
Fake SBI Bank: போலி SBI வங்கி:அதிர்ச்சியில் கிராம மக்கள்:கண்டுபிடிக்கப்படது எப்படி?
Fake SBI Bank: போலி SBI வங்கி:அதிர்ச்சியில் கிராம மக்கள்:கண்டுபிடிக்கப்படது எப்படி?
அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் -  நத்தம் விஸ்வநாதன்
அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - நத்தம் விஸ்வநாதன்
Chennai Air Show Death: உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்; குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறோம்- காங்கிரஸ் அறிவிப்பு
Chennai Air Show Death: உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்; குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கிறோம்- காங்கிரஸ் அறிவிப்பு
Ratan Tata: தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதி: என்ன ஆச்சு?
Ratan Tata: தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதி: என்ன ஆச்சு?
Embed widget