மேலும் அறிய

மேட்டூர் அணையின் நீர்வரத்து 8,563 கன அடியில் இருந்து 7,463 கன அடியாக குறைவு

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 12,500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அன்புள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 12,500 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 8,563 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 7,463 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து 8,563 கன அடியில் இருந்து 7,463 கன அடியாக குறைவு

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 119.46 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 92.61 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91 வது ஆண்டாக ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெறும். மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 12,000 கன அடியாக உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 2,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நீர் நிறுத்தப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 12,500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து 8,563 கன அடியில் இருந்து 7,463 கன அடியாக குறைவு

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.8 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 49.45 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 65 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 19.51 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 5,000 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 5,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
Breaking News LIVE, Sep 26: ஜாமினில் சிறையில் இருந்து வெளிவந்தார் செந்தில் பாலாஜி
Breaking News LIVE, Sep 26: ஜாமினில் சிறையில் இருந்து வெளிவந்தார் செந்தில் பாலாஜி
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
Breaking News LIVE, Sep 26: ஜாமினில் சிறையில் இருந்து வெளிவந்தார் செந்தில் பாலாஜி
Breaking News LIVE, Sep 26: ஜாமினில் சிறையில் இருந்து வெளிவந்தார் செந்தில் பாலாஜி
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
பரிதாபங்கள் யூடியூப் சேனலுக்கு நெருக்கடி.. வேலையை காட்டும் பாஜக.. ஆந்திராவுக்கு பறந்த புகார்!
TN Rain Alert:அடுத்த 7 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை முன்னறிவுப்பு தகவல் இதோ!
TN Rain Alert:அடுத்த 7 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை முன்னறிவுப்பு தகவல் இதோ!
சக்ஸஸ்.. ஜப்பானை பின்னுக்கு தள்ளிய இந்தியா! ஆசியாவின் 3ஆவது சக்திவாய்ந்த நாடாக உருவானது எப்படி?
சக்ஸஸ்.. ஜப்பானை பின்னுக்கு தள்ளிய இந்தியா! ஆசியாவின் 3ஆவது சக்திவாய்ந்த நாடாக உருவானது எப்படி?
அம்பேத்கரும், காந்தியும் தலித்களுக்காக போராடினார்கள் என்பது தவறு - ஆர்.கே.செல்வமணி
அம்பேத்கரும், காந்தியும் தலித்களுக்காக போராடினார்கள் என்பது தவறு - ஆர்.கே.செல்வமணி
Embed widget