மேலும் அறிய

மேட்டூர் அணையின் நீர்வரத்து 18,094 கன அடியில் இருந்து 17,586 கன அடியாக சரிவு

மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 8,100 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 15,929 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 18,094 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 17,586 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து 18,094 கன அடியில் இருந்து 17,586 கன அடியாக சரிவு

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 98.56 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 62.99 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 91 வது ஆண்டாக கடந்த ஜூலை 28 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக பாசன வசதி பெறும். மேட்டூர் அணையின் நீர் திறப்பினால் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குருவை, சம்பா சாகுபடி செய்துள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 7,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் 16 கண் மதகுகள் மூலமாக 2,500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வந்த நீர் தற்போது நிறுத்தப்பட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 8,100 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து 18,094 கன அடியில் இருந்து 17,586 கன அடியாக சரிவு

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.8 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 49.45 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 65 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 19.51 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 1,000 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Food Poisonning: பிறந்தநாள் கேக் உண்ட 5 வயது சிறுவன் உயிரிழப்பு, தீவிர சிகிச்சையில் பெற்றோர் - பெங்களூருவில்  விபரீதம்
Food Poisonning: பிறந்தநாள் கேக் உண்ட 5 வயது சிறுவன் உயிரிழப்பு, தீவிர சிகிச்சையில் பெற்றோர் - பெங்களூருவில் விபரீதம்
Breaking News LIVE: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? விவரம் உள்ளே..!
Breaking News LIVE: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? விவரம் உள்ளே..!
PM Modi Russia: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று ரஷ்யா செல்லும் பிரதமர் மோடி - சீன அதிபரை சந்திக்க பிளான்
PM Modi Russia: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று ரஷ்யா செல்லும் பிரதமர் மோடி - சீன அதிபரை சந்திக்க பிளான்
Watch Video: 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி - அலேக்காக பிடித்து தூக்கி காப்பாற்றும் வீடியோ
Watch Video: 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி - அலேக்காக பிடித்து தூக்கி காப்பாற்றும் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay TVK Manadu : கார் பார்கிங்கில் தேங்கிய மழைநீர்!அடாவடி செய்யும் பவுன்சர்கள் நடக்குமா தவெக மாநாடு?Irfan baby Delivery Video : மீண்டும்..மீண்டுமா?தொப்புள்கொடி வெட்டும் வீடியோ அடுத்த சர்ச்சையில் இர்ஃபான்!Bus Accident : FULL SPEED-ல் வந்த பேருந்து ஒன்றோடு ஓன்று மோதி விபத்து பதறவைக்கும் CCTV காட்சி SalemVijay TVK Maanadu |‘’யாரும் உள்ள போகமுடியாது’’மிரட்டும் பவுன்சர்கள்!தவெக மாநாடு ATROCITIES

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Food Poisonning: பிறந்தநாள் கேக் உண்ட 5 வயது சிறுவன் உயிரிழப்பு, தீவிர சிகிச்சையில் பெற்றோர் - பெங்களூருவில்  விபரீதம்
Food Poisonning: பிறந்தநாள் கேக் உண்ட 5 வயது சிறுவன் உயிரிழப்பு, தீவிர சிகிச்சையில் பெற்றோர் - பெங்களூருவில் விபரீதம்
Breaking News LIVE: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? விவரம் உள்ளே..!
Breaking News LIVE: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? விவரம் உள்ளே..!
PM Modi Russia: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று ரஷ்யா செல்லும் பிரதமர் மோடி - சீன அதிபரை சந்திக்க பிளான்
PM Modi Russia: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று ரஷ்யா செல்லும் பிரதமர் மோடி - சீன அதிபரை சந்திக்க பிளான்
Watch Video: 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி - அலேக்காக பிடித்து தூக்கி காப்பாற்றும் வீடியோ
Watch Video: 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி - அலேக்காக பிடித்து தூக்கி காப்பாற்றும் வீடியோ
TVK :  தவெக மாநிலச் செயலாளர் திடீர் மரணம்... சோகத்தில் மூழ்கிய தவெகவினர்
TVK : தவெக மாநிலச் செயலாளர் திடீர் மரணம்... சோகத்தில் மூழ்கிய தவெகவினர்
TN Rain Alert: தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழை , சென்னை நிலவரம் என்ன? - வானிலை அறிக்கை இதோ..!
TN Rain Alert: தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழை , சென்னை நிலவரம் என்ன? - வானிலை அறிக்கை இதோ..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
Nalla Neram Today Oct 22: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram Today: நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Embed widget