TN Rain Alert: மதியம் 1 மணிவரை 7 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த பகுதிகளில்?
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: (செண்டிமீட்டரில்)
வேளாங்கண்ணி (நாகப்பட்டினம் மாவட்டம்) 9, திருக்குவளை (நாகப்பட்டினம் மாவட்டம்) 7, தலைஞயர் (நாகப்பட்டினம் மாவட்டம்) 5, திருப்பூண்டி (நாகப்பட்டினம் மாவட்டம்), மயிலாடுதுறை (மயிலாடுதுறை மாவட்டம்) தலா 4, கோடியக்கரை (நாகப்பட்டினம் மாவட்டம்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர் மாவட்டம்), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம் மாவட்டம்), வேதாரண்யம் (நாகப்பட்டினம் மாவட்டம்), செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை மாவட்டம்), தரங்கம்பாடி (மயிலாடுதுறை மாவட்டம்), காரைக்கால் (காரைக்கால் மாவட்டம்) தலா 3, மன்னார்குடி (திருவாரூர் மாவட்டம்), ஊத்து (திருநெல்வேலி மாவட்டம்), நாலுமூக்கு (திருநெல்வேலி மாவட்டம்), மதுக்கூர் (தஞ்சாவூர் மாவட்டம்), திருவாரூர் (திருவாரூர் மாவட்டம்), நன்னிலம் (திருவாரூர் மாவட்டம்), மாஞ்சோலை (திருநெல்வேலி மாவட்டம்) தலா 2, கொடவாசல் (திருவாரூர் மாவட்டம்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல் மாவட்டம்), காக்காச்சி (திருநெல்வேலி மாவட்டம்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர் மாவட்டம்), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர் மாவட்டம்), கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்), மலையூர் (புதுக்கோட்டை மாவட்டம்), திஜாஸ்ராமபட்டினம். , ஆலங்குடி (புதுக்கோட்டை மாவட்டம்), சீர்காளி (மயிலாடுதுறை மாவட்டம்), நீடாமங்கலம் (திருவாரூர் மாவட்டம்), மஞ்சளாறு (தஞ்சாவூர் மாவட்டம்), முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம்), பாண்டவையர் தலைவர் (திருவாரூர் மாவட்டம்), ஒர்த்தநாடு (தஞ்சாவூர் மாவட்டம்) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
நேற்று லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்று தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் வரும் 26 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அதேபோல் நகரின் ஒரு சில பகுதிகளில் மட்டும் சாரல் மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக மழை இல்லாமல் வெயில் அடித்து வந்த நிலையில், தற்போது வானிலை முற்றிலுமாக மாறியுள்ளது.