தொண்டையில் சிக்கிய உலோக டாலர்: அறுவை சிகிச்சையால் பிழைத்த குழந்தை - முதல்வர் திட்டத்தால் கிடைத்த உதவி!
நான்கு வயது பெண் குழந்தையின் தொண்டையில் சிக்கிய உலோக டாலரை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.
4 வயது குழந்தை
தூத்துக்குடியைச் சேர்ந்த நான்கு வயது குழந்தை ஒன்று, தனது கழுத்தில் கிடந்த சங்கிலியில் இருந்த உலோக டாலரை விளையாடும்போது தவறுதலாக விழுங்கியுள்ளது.
அதனைத் தொடர்ந்து அந்தக் குழந்தை உணவு சாப்பிட முடியாமலும், மூச்சு விட முடியாமலும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியது. தொடர்ந்து குழந்தையை சோதனையிட்ட பெற்றோர், குழந்தை டாலரை விழுங்கியதைக் கண்டறிந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பின்னர் உடனடியாக அக்குழந்தை தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அகற்றிய அரசு மருத்துவர்கள்
அங்கு குழந்தைக்கு எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தொண்டையில் மேல் உணவுக்குழாய் மட்டத்தில் வைர வடிவ உலோக டாலர் இருப்பது தெரிய வந்தது.
மேலும் படிக்க: Thanjavore : கிரில் கம்பிக்குள் மாட்டிக்கொண்ட தலை..! பரிதவித்த ஒன்றரை வயது குழந்தை..! கும்பகோணத்தில் பரபரப்பு!
செலவு வைத்த சேட்டை! குழந்தை உடைத்த பொம்மை விலை ரூ.3.5 லட்சம்.... கறார் காட்டிய கடை!
அதனையடுத்து மருத்துவக் கல்லூரி டீன் நேருவின் அறிவுறுத்தலின் பேரில், காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சிவசங்கரி, சந்தான கிருஷ்ணகுமார், ராபின் ரிச்சர்ட்ஸ், மயக்க மருந்து நிபுணர்கள் பலராமகிருஷ்ணன் கிர்த ராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர், குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
மருத்துவர் குழுவினருக்குப் பாராட்டு
தொடர்ந்து உணவுக்குழாய் உள்நோக்கு கருவி மூலம் குழந்தையின் தொண் டையில் இருந்த உலோக டாலரை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். இந்த அறுவை சிகிச்சையானது முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டது.
இதையடுத்து டீன் நேரு, மருத்துவக் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், துணைக் கண்காணிப்பாளர் குமரன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி ஆகியோர் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர் குழுவினரைப் பாராட்டினர்.
மேலும் படிக்க: Chidambaram Temple Row: பயம் கிடையாது; எங்களுக்கும் பாயத் தெரியும் - மதுரை ஆதினத்திற்கு அமைச்சர் எச்சரிக்கை
அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை மூடி கல்வி வாய்ப்பைப் பறிப்பதா?- அன்புமணி கண்டனம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்