(Source: ECI/ABP News/ABP Majha)
Chidambaram Temple Row: பயம் கிடையாது; எங்களுக்கும் பாயத் தெரியும் - மதுரை ஆதினத்திற்கு அமைச்சர் எச்சரிக்கை
சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத்துறையின் ஆய்வுக்கு ஒத்துழைப்புதான் மனுநீதி, மனுதர்மம் - அமைச்சர் சேகர்பாபு
பதுங்குவதை பயமாக மதுரை ஆதினம் கருதக்கூடாது என்றும், எங்களுக்கும் பாயத்தெரியும் எனவும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலின் வரவு - செலவு கணக்கு விவரங்களை ஆய்வு செய்ய வந்த அறநிலையத்துறை குழுவுக்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “சிதம்பரம் நடராஜர் கோயில் பொதுக்கோயில் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொதுக்கோயிலில் புகார்கள் எழும்போது இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி கோயிலுக்கு சென்று விசாரிக்கலாம். மடியிலே கனமில்லை என்றால், வழியிலே பயமில்லை என்பார்கள். எந்தவிதமான பிரச்சினை இல்லை என்றால் ஆய்வு செய்ய வருபவர்களுக்கு ஒத்துழைப்புதான் மனுநீதி, மனுதர்மம் ஆகும். உரிய சட்டத்தின்படி வந்திருக்கும் புகார்களின் அடிப்படையில் அறநிலையத்துறையின் குழுவினர் ஆய்வுக்கு சென்றிருக்கிறார்கள். சட்டத்தை மீறி எந்தவிதமான செயலிலும் ஈடுபடமாட்டோம் என்று உறுதியளித்திருக்கிறோம்” என்று கூறினார்.
மேலும், சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு செய்வது தொடர்பாக சட்ட ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கோயிலில் சட்டப்படி உறுதியாக ஆய்வு நடத்தப்பட்டு, பக்தர்களின் புகார் தொடர்பாக நிச்சயம் விசாரணை மேற்கொள்ளப்படும்” எனவும் அமைச்சர் கூறினார்.
இதனிடையே, அறநிலையத்துறை கேள்விகளுக்கு சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மாலை 4 மணிக்கு பதிலளிக்கின்றனர். காலையில் ஆய்வுக்கு ஒத்துழைப்பு தர மறுத்த நிலையில் மாலையில் வழக்கறிஞர் மூலம் பதில் அளிக்க இருக்கின்றனர்.
Chidambaram Natarajar Temple LIVE | ஆய்வுக்கு வந்த அதிகாரிகள்.. செக் வைக்கும் தீட்சதர்கள்.. நேரலை! https://t.co/ZmfOvp8PBh
— ABP Nadu (@abpnadu) June 7, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்