மேலும் அறிய

Meendum Manjappai Campaign : மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம், விழிப்புணர்வு, அமலாக்கம்.. வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு..

 “மீண்டும் மஞ்சப்பை”- “பாரம்பரிய துணிப்பைகளை பயன்படுத்தும் பழக்கத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான அழைப்பு”: தமிழ்நாடு முதலமைச்சரால் 2021 டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. 

மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது

மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம்

மாநிலம் முழுவதும் 14 வகையான ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் (SUP) உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றைத் தடைசெய்து, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்திய மாநிலங்களில் தமிழ்நாடு அரசும் ஒன்றாகும். தடைக்கு கூடுதலாக, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், பிளாஸ்டிக்கிற்கு மாற்றானவற்றை ஊக்குவிப்பதற்கும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மீதான தடையை அமல்படுத்துவதன் மூலமும் மாநிலம் பன்முக அணுகுமுறையை எடுத்து வருகிறது

 “மீண்டும் மஞ்சப்பை”- “பாரம்பரிய துணிப்பைகளை பயன்படுத்தும் பழக்கத்தை மீண்டும் கொண்டு வருவதற்கான அழைப்பு” என்ற தலைப்பில் ஒரு மாநில பிரச்சாரம், பாரம்பரிய இயற்கை அடிப்படையிலான தீர்வுகளுடன் “தூக்கி எறியும் பிளாஸ்டிக்கிற்கு எதிரான மக்கள் பிரச்சாரம்” என்ற பெயரில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மீதான தடையை அமல்படுத்துவதுடன் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பிளாஸ்டிக்கிற்கு எதிரான மாற்று பொருட்களை விளம்பரப்படுத்தவும் தமிழ்நாடு முதலமைச்சரால் 2021 டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. 

'மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம்,' பொது மக்களிடையே விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சுழலுக்கு உகந்த மாற்றுப்பொருட்களை ஏற்றுக்கொள்வதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மஞ்சப்பை பிரச்சாரத்தின் விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்துடன், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தி மாநிலம் முழுவதும் 2.2 லட்சத்திற்கும் அதிகமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில் சாலைக் காட்சிகள், பேரணிகள், தெரு நாடகங்கள், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை மற்றும் நிலையான வாழ்வு குறித்த  விளக்கங்கள்/ விரிவுரைகள், கடற்கரை தூய்மைப்படுத்துதல், நாட்டுப்புற நடனங்கள், விழிப்புணர்வு செய்தி வாகனங்கள், மாரத்தான், காட்சிப் பலகை மூலம் விழிப்புணர்வு மற்றும் மஞ்சப்பை விநியோகம் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் போன்ற புதுமையான செயல்பாடுகள் அடங்கும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் குழந்தைகளைக் கவரும் வகையில், பிளாஸ்டிக்கின் பாதிப்புகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப்பொருட்களின் நன்மைகளைப் பற்றி அவர்களுக்கு கற்பிக்க  முக்கிய தகவல்களுடன் கூடிய 19 அனிமேஷன் கல்வி வீடியோக்களையும் தயாரித்துள்ளது.

இந்தக் காணொளிகள் கிட்டத்தட்ட 60,000 பள்ளிகள் மற்றும் ஒன்பது ஆதி திராவிட பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த முயற்சியானது, சிறந்த, நிலையான எதிர்காலத்திற்காக இளம் மாணவர்களுக்கு சிறு வயதிலிருந்தே கற்ப்பிக்கப்படுவதை உறுதி செய்கிறது.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம், 30, அக்டோபர் 2023 அன்று,  சென்னையில் மஞ்சப்பை படைப்பிரிவை அறிமுகப்படுத்தியது. இதில் இரண்டு மின்சார கார்கள் மற்றும்  ஆறு மின்சார இரு சக்கர வாகனங்கள் அடங்கும். இந்த படைப்பிரிவு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடைக்கு எதிரான விதி மீறுபவர்களை கண்டறிந்து உள்ளாட்சி அமைப்புகள் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்க உறுதி செய்கிறது.

அதன் வெற்றியின் அடிப்படையில், சென்னையில் இரண்டாவது மஞ்சப்பைப் படை 12, மார்ச் 2024 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் ஆகஸ்ட் 2024 இல் ஊட்டி, கொடைக்கானல் மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலங்களிலும் "பசுமைப் படை" விரிவுபடுத்தப்பட்டது. கூடுதலாக, ' நீலப் படை' 27, ஆகஸ்ட் 2024 அன்று கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டை மையமாகக் கொண்டு சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நீல மற்றும் மஞ்சள் படைப்பிரிவுகள் – சராசரியாக 74,000 கிலோமீட்டர்களை கடந்து, 5,400க்கும் மேற்பட்ட இடங்களை சென்றடைந்துள்ளனர், மேலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு எதிராக நிலையான மாற்றங்களை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், 30, அக்டோபர் 2023 அன்று, கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டை கண்காணிக்கவும், மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சென்னை பெசன்ட் நகர் கடற்கரையிலும் மற்றும் 12, மார்ச் 2024 அன்று நீலாங்கரை கடற்கரையிலும் கடலோர குப்பை கண்காணிப்பு மையங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இம்மையங்களில் மஞ்சப்பை விற்பனை இயந்திரம் மற்றும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்குகள் மற்றும் சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் ஆகியவை பள்ளி மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் காட்சிப்படுத்தப்படுகின்றன.

இதுவரை இரண்டு மையங்களிலும் 5,000 பார்வையாளர்கள் பார்வையிட்டு, 16 பள்ளி குழுக்கள் பங்கேற்று, 2,215 துணிப் பைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. பெருநிறுவனங்களுடன் இணைந்து சமூக மற்றும் சுற்றுச்சூழலில் தாக்கத்தை ஏற்படுத்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப் படுகின்றன.

விழிப்புணர்வு மற்றும் அமலாக்கத்தில், அதன் முயற்சிகளுக்கு கூடுதலாக, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மஞ்சப்பை விருதுகள் போன்ற முன்முயற்சிகள் மூலம் நிலையான நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறது. 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விருதுத் திட்டம், பிளாஸ்டிக்கிற்கு மாற்றானவற்றை ஊக்குவிப்பதிலும் சமூக விழிப்புணர்வில் தீவிரமாக ஈடுபடுவதிலும் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களை அங்கீகரிக்கிறது. அதன் தொடக்கத்தில் இருந்து, மஞ்சப்பை விருதுகள் ஆறு பள்ளிகள், ஆறு கல்லூரிகள் மற்றும் மூன்று வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.  இது சமூக ஈடுபாடு மற்றும் நிலைத்தன்மை முயற்சிகளுக்கான அர்ப்பணிப்பை கணிசமாக மேம்படுத்துகிறது.

மீன்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை வலுப்படுத்தவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளை அணுகுவதை மேம்படுத்தவும், துணிப் பைகளை வழங்கும் புதுமையான மஞ்சப்பை விற்பனை இயந்திரங்களை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியது. மாநிலம் முழுவதும் அதிக அளவில் மக்கள் நடமாடும்   188 இடங்களில் நிறுவப்பட்ட இந்த இயந்திரங்கள் கிட்டத்தட்ட 385,000 பைகளை இதுவரை விநியோகித்துள்ளன.

இந்தப் பிளாஸ்டிக் தடையானது, 238 ஒருமுறை பயன்படுத்தும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தித் தொழில்களை மூடுவதற்கு வழிவகுத்துள்ள அதே வேளையில், 725 சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் உற்பத்தியாளர்களின் உயர்வுக்கு வழிவகுத்தது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகள் மீதான தடையை அமல்படுத்துவதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் 16 லட்சத்துக்கும் அதிகமான ஆய்வுகள் உள்ளாட்சி அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டு, சுமார் 2600 டன் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், விதியை மீறுபவர்களிடம் இருந்து 19 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், செப்டம்பர் 26-27, 2022 அன்று, 173 கண்காட்சியாளர்கள் மற்றும் 5,000 பார்வையாளர்களைக் கொண்ட சுற்றுச்சூழல் மாற்றுகள் மற்றும் புதிதாக தொழில் தொடங்குவோர் மாநாட்டின் தேசிய கண்காட்சியை நடத்தியது. இந்த நிகழ்வு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் இடையே இணைப்புகளை எளிதாக்கியதுடன் சூழல் நட்பு தீர்வுகளை முன்னிலைப்படுத்தியது. கண்காட்சியைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிலிருந்து மாறுவதற்கு உதவும் வகையில், 725 சுற்றுச்சூழல் மாற்று உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் கோப்பகத்தை வெளியிட்டது.

மஞ்சப்பை விற்பனை இயந்திரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாற்று பொருட்களின் வாடிக்கையாளர்களுடனான அனுபவத்தினால், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஆகஸ்ட் 16,2024 அன்று பேக்கத்தான் (Bagathon) என்ற பெயரில் ஹேக்கத்தான் (hackathon) போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஹேக்கத்தான் போட்டியில் தொழில்முனைபவர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களிடமிருந்து குறைந்த செலவில் உற்பத்தி முறைகளை ஆராய்வதன் மூலம் துணிப் பைகளின் விலையை ₹5க்குள் குறைக்க வழிவகுக்கும். வெற்றி பெறுபவர்கள் தங்கள் புதுமையான யோசனைகளை விரிவுபடுத்துவதற்கும் வணிகமயமாக்குவதற்கும் ஆதரவைப் பெறுவார்கள்.

மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம் மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையை திறம்பட கண்காணிக்கவும் மதிப்பீடு செய்யவும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வலுவான டிஜிட்டல் தொழில்நுட்பங்களை செயல்படுத்தியுள்ளது. ஜூன் 6, 2023 அன்று தொடங்கப்பட்ட இந்த முயற்சியில் மீண்டும் மஞ்சப்பை கைபேசி செயலி மற்றும் இணையதளம் முக்கிய பங்கு வகிக்கிறது. பயன்பாட்டில் 900 தயாரிப்பு உற்பத்தியாளர்களின் சுயவிவரங்கள், மஞ்சப்பை விற்பனை இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ள இடங்களின் புள்ளிவிவரங்கள் மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடை மீறல்களுக்கான தகவல் அளிக்கும் வசதி ஆகியவை உள்ளன. 18,000 பார்வையாளர்களுடன், இது சுற்றுச்சுழலுக்கு உகந்த மாற்றுப்பொருட்களை அணுகுவதை கணிசமாக மேம்படுத்தி நிலையான நடைமுறைகளை ஆதரிக்கிறது.

 செயலுக்கு கூடுதலாக, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடைக்கு எதிரான விதி மீறல்கள், விழிப்புணர்வு நடவடிக்கைகள், மஞ்சப்பை விற்பனை இயந்திர செயல்பாடுகள் மற்றும் பசுமை படை மற்றும் கடற்கரை மையம் செயல்பாடுகள் பற்றிய தரவுகள், ஆப்ஸ் அடிப்படையிலான கருவிகள் மூலம் கண்காணிக்க பிற டிஜிட்டல் கண்காணிப்பு வழிமுறைகளை உருவாக்கியுள்ளது. இந்தத் தரவுகள் டிஜிட்டல் டாஷ்போர்டுகள் மூலம் தலைமையகத்தில் நிகழ்நேரத்தில் கண்காணிக்கப்பட்டு, சிறந்த மேற்பார்வை மற்றும் சரியான நேரத்தில் தரவுகள் பெறுவதை உறுதி செய்கிறது.

மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம், விழிப்புணர்வு, அமலாக்கம் மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் தமிழகத்தில் நிலையான நடைமுறைகளை வெற்றிகரமாக ஊக்குவித்து, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை உபயோகிப்பதைக் குறைத்து வருகிறது. பொது ஈடுபாட்டை விரிவுபடுத்துதல், அனைத்து தரப்பினரிடமும் பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பை வளர்ப்பது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளில் புதுமைகளை உருவாக்குதல் போன்ற முயற்சிகளை தீவிரப்படுத்துவதன் மூலம் தமிழக அரசு தனது சாதனைகளை அதிகரித்து வருகிறது. இந்த முன்முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதன் மூலமும், அனைத்து தரப்பினரிடையே கூட்டுச் செயலை உறுதி செய்வதன் மூலமும், அனைவருக்கும் தூய்மையான, பசுமையான, மேலும் நிலையான எதிர்காலத்தை உருவாக்க தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இதுதான் மனிதநேயம்.. புயலால் நிலைகுலைந்த மியான்மர்.. ஓடோடி சென்று உதவிய இந்திய கடற்படை!
இதுதான் மனிதநேயம்.. புயலால் நிலைகுலைந்த மியான்மர்.. ஓடோடி சென்று உதவிய இந்திய கடற்படை!
கதிகலங்க வைக்கும் ஒற்றை ஓநாய்.. அச்சத்தில் கிராம மக்கள்.. திணறும் வனத்துறை அதிகாரிகள்!
கதிகலங்க வைக்கும் ஒற்றை ஓநாய்.. அச்சத்தில் கிராம மக்கள்.. திணறும் வனத்துறை அதிகாரிகள்!
"கடைசி முறையா கூப்பிடுறேன்" விடாபிடியாக இருக்கும் மருத்துவர்கள்.. மீண்டும் இறங்கி வந்த மம்தா!
Ritika Singh : வேட்டையன் படத்தில் மாஸ் காட்டும் ரித்திகா சிங்...படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்
Ritika Singh : வேட்டையன் படத்தில் மாஸ் காட்டும் ரித்திகா சிங்...படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SP Varun kumar Anna Award : அரசின் அண்ணா பதக்கம்! அடித்து ஆடும் வருண்குமார்! Thirumavalavan meets MK Stalin : ஸ்டாலின் திருமா மீட்டிங்! முடிவுக்கு வருமா சர்ச்சை? பின்னணி என்ன?Nitin Gadkari on Congress : ’’எனக்கு பிரதமர் பதவி’’எதிர்க்கட்சி பக்கா ஸ்கெட்ச்! போட்டுடைத்த  கட்காரிMK Stalin Phone Call |’’தைரியமா இருங்க’’PHONE-ல் பேசிய முதல்வர்! உத்தரகாண்ட் நிலச்சரிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இதுதான் மனிதநேயம்.. புயலால் நிலைகுலைந்த மியான்மர்.. ஓடோடி சென்று உதவிய இந்திய கடற்படை!
இதுதான் மனிதநேயம்.. புயலால் நிலைகுலைந்த மியான்மர்.. ஓடோடி சென்று உதவிய இந்திய கடற்படை!
கதிகலங்க வைக்கும் ஒற்றை ஓநாய்.. அச்சத்தில் கிராம மக்கள்.. திணறும் வனத்துறை அதிகாரிகள்!
கதிகலங்க வைக்கும் ஒற்றை ஓநாய்.. அச்சத்தில் கிராம மக்கள்.. திணறும் வனத்துறை அதிகாரிகள்!
"கடைசி முறையா கூப்பிடுறேன்" விடாபிடியாக இருக்கும் மருத்துவர்கள்.. மீண்டும் இறங்கி வந்த மம்தா!
Ritika Singh : வேட்டையன் படத்தில் மாஸ் காட்டும் ரித்திகா சிங்...படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்
Ritika Singh : வேட்டையன் படத்தில் மாஸ் காட்டும் ரித்திகா சிங்...படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்
Breaking News LIVE: கும்மிடிப்பூண்டி தடைகளை உடைத்து பட்டியலின மக்கள் ஆலய பிரவேசம்..
Breaking News LIVE: கும்மிடிப்பூண்டி தடைகளை உடைத்து பட்டியலின மக்கள் ஆலய பிரவேசம்..
யாரை பார்த்து யார் தேசத்துரோகி என்று கூறுவது ? - எச்.ராஜாவால் செல்வப்பெருந்தகை ஆவேசம்
யாரை பார்த்து யார் தேசத்துரோகி என்று கூறுவது ? - எச்.ராஜாவால் செல்வப்பெருந்தகை ஆவேசம்
TVK Vijay Maanadu: தவெக மாநாடு தேதி இதான்...! இறுதி செய்த தொண்டர்கள்...!
தவெக மாநாடு தேதி இதான்...! இறுதி செய்த தொண்டர்கள்...!
”துர்கை அம்மன் அருளை முழுமையாக பெற வேண்டுமா” அப்ப இத மட்டும் பண்ணுங்க போதும்..!
”துர்கை அம்மன் அருளை முழுமையாக பெற வேண்டுமா” அப்ப இத மட்டும் பண்ணுங்க போதும்..!
Embed widget