மேலும் அறிய

பிரசித்தி பெற்ற கோவில்களில் மருத்துவ மையங்கள் திறப்பு.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிரடி..

பக்தர்கள் அதிகம் வருகை தரும் 5 திருக்கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

பக்தர்கள் அதிகம் வருகை தரும்  5 திருக்கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்கள் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (2.12.2022) தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் மதுரை - அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்,  இருக்கன்குடி - அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி - அருள்மிகு பண்ணாரியம்மன் திருக்கோயில், மதுரை - அழகர்கோவில்,  அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயில் ஆகிய 5 திருக்கோயில்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

2021-22ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில், பக்தர்கள் அதிகளவில் வருகை புரியும் 10 திருக்கோயில்களில் தேவையான மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடன் கூடிய முதலுதவி மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக, திருச்செந்தூர் - அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,  திருவண்ணாமலை - அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில், மேல்மலையனூர் - அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், சோளிங்கர்- அருள்மிகு இலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், மருதமலை - அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி - அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய  திருக்கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்கள் மற்றும் பழனி - அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ மையம் ஆகியவற்றை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடந்த 31.12.2021 அன்று  காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து இராமேசுவரம் - அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், திருவரங்கம் - அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், சமயபுரம் - அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஆகிய 3 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் திறந்து வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, 2022-23ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில்,  “பக்தர்கள் அதிகளவில் வருகை புரியும் 10 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தாண்டு மேலும் 5 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் புதிதாக அமைக்கப்படும்“ என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மதுரை- அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்,  இருக்கன்குடி- அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி - அருள்மிகு பண்ணாரியம்மன் திருக்கோயில், மதுரை - அழகர்கோவில்,  அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், சங்கரன்கோவில் - அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயில் ஆகிய 5 திருக்கோயில்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களை முதலமைச்சர் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்த மருத்துவ மையங்களில் பணியாற்றிட தகுதியான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர். முதலுதவி மற்றும் அடிப்படை சிகிச்சை மேற்கொள்வதற்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், இரத்த அழுத்தமானி, படுக்கைகள், உயிர்காக்கும் மருந்துகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. இதனால் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நேரத்தில் பேருதவியாக இருக்கும். இதற்கான செலவினங்கள் அந்தந்த திருக்கோயிலின் நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முனைவர்  வெ. இறையன்பு, இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இ.ஆ.ப., இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் திரு.இரா.கண்ணன், இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.

மதுரை, விருதுநகர், ஈரோடு, தென்காசி ஆகிய மாவட்டங்களிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. கோ. தளபதி, திரு. எம். பூமிநாதன், திரு. இ. ராஜா, மதுரை மாநகராட்சி மேயர் திருமதி வி. இந்திராணி, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. எஸ். அனீஷ் சேகர், இ.ஆ.ப., விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ஜெ.மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி, இ.ஆ.ப., தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பி. ஆகாஷ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget