மேலும் அறிய

விஜய்- த்ரிஷா பற்றி பேசிய நயினார்.. அட்வைஸ் கொடுத்த வைகோ.. என்ன சொன்னார் தெரியுமா?

நயினார் நாகேந்திரன் சொன்னபோது தான் அப்படியா இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா என நினைக்க தோன்றியது. அதைப்பற்றி எல்லாரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என வைகோ கூறியுள்ளார்.

நயினார் நாகேந்திரன் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விமர்சிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

சேலத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சி தலைவர் விஜய், பாஜகவை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகர் விஜயை பிரபல நடிகையான த்ரிஷாவுடன் இணைத்து பேசினார். அவரின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை கிளப்பியது. நயினார் பேச்சுக்கு தமிழக பெண் எம்.பி.,க்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் தனது பேச்சில் யாரையும் புண்படுத்தும் நோக்கமில்லை என நயினார் நாகேந்திரன் விளக்கமளித்திருந்தார்.  ஆனால் அவரின் பேச்சுக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம், நயினார் பேசியது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு, “எனக்கு விஜய்க்கும், த்ரிஷாவுக்கு என்ன சம்பந்தம் என தெரியாது. ஆனால் நயினார் நாகேந்திரன் சொன்னபோது தான் அப்படியா இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா என நினைக்க தோன்றியது. அதைப்பற்றி எல்லாரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நயினார் நாகேந்திரன் ரொம்ப பண்புள்ளவர். ரொம்ப அமைதியானவர். அமைச்சராக இருக்கும்போது நேர்மையாக இருந்தவர். நயினார் நாகேந்திரன் ஏன் இப்படி சொன்னார் என தெரியாது. தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி நான் பொதுவாக விமர்சிப்பதில்லை. அப்படிப்பட்டதை செய்ய வேண்டாம் என நயினார் நாகேந்திரனிடம் கேட்டுக் கொள்கிறேன். 

உண்மை எடப்பாடி பழனிசாமிக்கு சுடுகிறது

தொடர்ந்து அதிமுக, பாஜகவுக்கு அடிமை என ஒவ்வொரு மேடையிலும் முதலமைச்சர் அவதூறு பரப்புவதாக எடப்பாடி பழனிசாமி கூறுவது பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வைகோ, “உண்மை அவர்களுக்கு சுடுகிறது. அதனால் அவதூறு போல தோன்றுகிறது. கொத்தடிமை வேலையை தான் எடப்பாடி பழனிசாமி குழு செய்து வந்திருக்கிறது. அதனைத்தான் முதலமைச்சர் பட்டவர்த்தமாக தெரிவித்திருக்கிறார் என சொன்னார். 

காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதை பற்றி பதிலளித்த வைகோ, “இப்படியான ஒரு சூழல் இல்லாத ஊருக்கு போகாத வழியை காங்கிரஸ் சொல்லிக் கொண்டிருக்கிறது. நிறைய சீட்டு வேண்டும், கூட்டணி ஆட்சி என அவர்கள் விருப்பத்தை தெரிவிக்கிறார். அதற்கு வாய்ப்பே இல்லை” என விமர்சித்தார். மேலும் மகளிர் உரிமைத்தொகை ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது குறித்து பேசிய அவர், “பயந்து போன எதிர்க்கட்சி கூட்டம், முதல்வர் நாற்காலி எனக்கு தான் என சொல்லும் கூட்டம் என அனைவரும் இதனைப் பார்த்து பயந்து போகியுள்ளது.  தமிழ்நாட்டின் கோடிக்கணக்கான மகளிர் வாக்குச்சாவடிக்கு போனால் திமுகவுக்கு தான் ஓட்டுப்போடுவார்கள் என்பதில் தீர்மானமாக இருக்கிறார்கள். ஆனால் அதனை எதிர்ப்பவர்களுக்கு ஆத்திரமாக உள்ளது என வைகோ தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

ஸ்டீயரிங் பிடிக்கும் திருநங்கைகள்.. சுழலும் வாழ்க்கைச் சக்கரம்! - சீர்காழியில் நெகிழ்ச்சி சம்பவம்!
ஸ்டீயரிங் பிடிக்கும் திருநங்கைகள்.. சுழலும் வாழ்க்கைச் சக்கரம்! - சீர்காழியில் நெகிழ்ச்சி சம்பவம்!
தமிழகத்தில் இப்படி ஒரு ஊரா? - மது குடித்து வந்தால் என்ன தண்டனை தெரியுமா? - மகிழ்ச்சியில் பெண்கள்
தமிழகத்தில் இப்படி ஒரு ஊரா? - மது குடித்து வந்தால் என்ன தண்டனை தெரியுமா? - மகிழ்ச்சியில் பெண்கள்
Today Top Five News : 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Today Top Five News : 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Chennai OMR Makeover: லண்டன், சிங்கப்பூர் ரேஞ்சுக்கு மாறப்போகும் சென்னையின் OMR சாலை! மெட்ரோ, பேருந்து, சைக்கிள் டிராக், மாஸ்டர் பிளான்!
லண்டன், சிங்கப்பூர் ரேஞ்சுக்கு மாறப்போகும் சென்னையின் OMR சாலை! மெட்ரோ, பேருந்து,மாஸ்டர் பிளான்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
North Korea Ballistic Missile: ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Embed widget