![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
மாரிதாஸ் ஒரு அரசியல் விமர்சகர்; கருத்து சுதந்திரத்தின் கீழ் பேசுகிறார் - உயர்நீதிமன்ற கிளையில் வாதம்
’’மாரிதாஸ் மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த உமரி சங்கர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 19 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு’’
![மாரிதாஸ் ஒரு அரசியல் விமர்சகர்; கருத்து சுதந்திரத்தின் கீழ் பேசுகிறார் - உயர்நீதிமன்ற கிளையில் வாதம் Maridas is a political commentator; Speaks under Freedom of Expression - Argument by Maridas' Advocate in the Madurai Branch of the High Court மாரிதாஸ் ஒரு அரசியல் விமர்சகர்; கருத்து சுதந்திரத்தின் கீழ் பேசுகிறார் - உயர்நீதிமன்ற கிளையில் வாதம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/10/b48a6a0a25844e8194525a9beba9e396_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மதுரை யுடியூபர் மாரிதாஸ், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில்," NO CAA என வாசலில் கோலம் போட்ட விவகாரம் தொடர்பாக , காயத்திரி திமுக -பாகிஸ்தான் சேர்ந்து போட்ட கோலம் என்ற தலைப்பில் யூடூயூபர் மாரிதாஸ் வீடியோ வெளியிட்டு திமுகவை களங்கப்படுத்தி, திமுக மீது அவதூறு பரப்பி உள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி திமுக மாணவர் பிரிவை சேர்ந்த உமரி சங்கர் என்பவர் தூத்துக்குடி JM3 நீதிமன்றத்தில் மாரிதாஸ் மீது வழக்கு தொடர்ந்திருந்தார். என் மீது உமரி சங்கர் வழக்கு தொடர முகாந்திரம் இல்லை. எனவே என் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மாரிதாஸ் தரப்பில், "மாரிதாஸ் ஒரு அரசியல் விமர்சகர் கருத்து சுதந்திரத்தின் கீழ் பேசி உள்ளார். உமரிசங்கர் குறித்து ஏதும் பேசவில்லை. உமரி சங்கருக்கு இந்த வழக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய எந்த முகாந்திமும் இல்லை. எனவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மாரிதாஸ் மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த உமரி சங்கர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)