Minister Mano Thangaraj: ஆவினில் மின்சார சிக்கன நடவடிக்கை மூலம் ரூ.30 லட்சம் சேமிப்பு - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
Minister Mano Thangaraj: ஆவின் நிறுவனத்தில் இந்த மாதம் 6.9 % மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளதாக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
ஆவின் நிறுவனத்தில் இந்த மாதம் 6.9 % மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளதாக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், ”இந்த மாதம் ஆவின் நிறுவனத்தில் 6.9 % மின்சாரம் சேமித்து உள்ளோம்; இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு 30 லட்சம் ரூபாய்க்கு மேல் சேமிக்கப்பட்டு உள்ளது.” என்று தெரிவித்தார்.
சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தில் ஆவின் நிறுவனத்தின் நிர்வாக பயிற்சி மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கையெழுத்திட்டார்
செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதன் விவரம்:
”ஆவின் பல்வேறு நிர்வாக முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆவின் பால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்றால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இன்று ஆவின் வர்த்தக மேம்பாட்டிற்கான ஆலோசனை வழங்கவும், முறையான நிதி மேலாண்மை, மனிதவள மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும், தொழில் நுட்ப மேம்பாட்டிற்காக ஆலோசனை வழங்க இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இது ஆவின் வரலாற்றில் ஒரு மையில் கல்லாக அமையும். ஆவின் பால் பாக்கெட் அனுமதிக்க பட்ட மைக்ரான் அளவு தான் நாங்கள் தயாரிக்கிறோம். நிறுவனத்தில் உள்ள பல்வேறு குழுக்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்ட உள்ளது. இந்த மாதம் ஆவின் நிறுவனத்தில் 6.9 % மின்சாரம் சேமித்து உள்ளோம். இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு 30 லட்சம் ரூபாய்க்கு மேல் சேமிக்கப்பட்டு உள்ளது.” என்று கூறினார்.
தஞ்சாவூரில் ஆவின் தயிர் விலை உயர்வு குறித்து பேசுகையில்,” ஆவின் பொருட்களை பொறுத்தவரை மற்ற பொருட்களை விட விலை குறைவாகதான் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஏற்படும் எந்த ஒரு முயற்சியிலும் ஆவின் நிர்வாகம் ஈடுபடாது. பால் கொள்முதல் அதிகரித்து வருகிறது. எதிர்வரும் காலத்தில் செப்டம்பர் மாதத்தில் பால் வரத்து என்பது குறைவாக இருக்கும். எனவே தான் 200 ககும் மேற்பட்ட பால் சங்கங்கள் தொடங்கப்பட்டு உள்ளது. பால் கொள்முதல் அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 3 1/2 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் அதிகரித்துள்ளது.பண்டிகை காலங்களில் முழுமையான தரத்துடன் ஆவின் இனிப்புகள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் விலை அதிகரிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு முடிவு எடுக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.