மணப்பாறையில் இவ்வளவு மழையா? ஆய்வு வேண்டும்.. தமிழ்நாடு வெதர்மேன் கருத்து!
மணப்பாறையில் 3 மணி நேரத்தில் 274.6 மி.மீ மழை பெய்து இருப்பது குறித்து ஆய்வு நடத்தவேண்டும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கருத்து தெரிவித்துள்ளார்.
மணப்பாறையில் நேற்று காலை 6 மணி முதல் 9 மணிவரை அதிக கன மழைபெய்தது, அதாவது 27.6 மி.மீ மழை பதிவாகி உள்ளது. அதன் காரணமாக அரியாற்றில் தண்ணீர் வரத்து அதிக அளவில் உள்ளது. எனவே திருச்சி மாவட்டத்தில் அரியாற்றின் கரைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டது.
இதனால் அரியாற்றின் கரைப் பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தங்களது கால்நடைகளைப் பாதுகாப்பான இடங்களில் வைக்கவும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்தார்.
இந்தநிலையில், மணப்பாறையில் 3 மணி நேரத்தில் 274.6 மி.மீ மழை பெய்து இருப்பது குறித்து ஆய்வு நடத்தவேண்டும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மணப்பாறையில் 3 மணி நேரத்தில் 274.6 மி.மீ மழை பெய்திருப்பது சமவெளியில் மேகவெடிப்பு போன்றது. இவ்வளவு கடுமையான மழைக்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்ய வேண்டும். இதேபோல்தான், சில வருடங்களுக்கு முன்பு அரியலூர் நகரத்தில் 300 மி.மீ., மழை பெய்தது. ஆனால், இதுகுறித்த சரியான தேதி நினைவில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
Manapparai 274.6 mm rainfall in 3 hrs is one hell of a cloudburst in plains. Should be studied what caused such high intense rains. The clouds got blocked and did not move down. I remember one such even in Ariyalur town 300 mm few years ago, could not recollect the exact date.
— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) December 7, 2021
முன்னதாக, நேற்று சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், நேற்று தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதேபோல், திருச்சி, திண்டுக்கல், கரூர், திருப்பூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இன்று, தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சியை ஒட்டியுள்ள பகுதிகள், கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 9 ம் தேதி காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தொடர்ந்து, டிசம்பர் 10 ம் தேதிகளில் சென்னை மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற 8 ம் தேதி கூடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னதடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னதுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
டிச.9, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் தென் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னதுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வருகின்ற 10 ம் தேதி மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 12 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.) நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யகூடும் அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்