TVK 1st Anniversary: தவெக 2ம் ஆண்டு தொடக்கமே அசத்தல்..#GetOut கையெழுத்து இயக்கத்தை தொடங்கிய விஜய்..
தமிழக வெற்றிக் கழகத்தில் 2ம் ஆண்டு தொடக்க விழாவின்போது, #GetOut என்ற கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியதிலிருந்து, தமிழக அரசியலில் பெரும் புயல் ஏற்பட்டுள்ளது. அவரது கட்சியின் நகர்வுகளை அனைவருமே உற்று நோக்கி வருகின்றனர். இந்த நிலையில், இன்று மாமல்லபுரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவின் ஆரம்பமே அசத்தலாக இருந்தது.
பெரும் எதிர்பார்ப்புக்கிடையே தொடங்கிய 2-ம் ஆண்டு தொடக்க விழா
சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் அரங்கேறிவரும் நிகழ்வுகளால், தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அதில் ஒரு நிகழ்வு, தேர்தல் வியூக வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோர் தவெக உடன் இணைந்து செயல்படுவதுதான். இந்த நிலையில், தவெகவின் இன்றைய இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவிலும் அவர் பங்கேற்றுள்ளது, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
#GetOut கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்த விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவின் முதல் நிகழ்வாக, #GetOut என்ற கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டதுதான். அதாவது, தமிழகத்தில் திரைக்கு மறைவில் கபட நாடகமாடும் அரசியல்வாதிகள் அனைவரையும் தமிழகத்தை விட்டு வெளியேறச் சொல்லும் வகையில் இந்த #GetOut கையெழுத்து இயக்கம் தொடங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திமுக, பாஜக-விற்கு எதிராக தவெக இந்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது.
முதல் கையெழுத்தை போட்டு, இந்த மாபெரும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். அவரைத் தொடர்ந்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகளான ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

