Aadhav Arjuna: விஜயின் பேண்ட், சட்டையைக் கூட காப்பி அடிக்கின்றனர்; தவெக விழாவில் திமுகவைப் போட்டுப் பொளந்த ஆதவ் அர்ஜூனா!
TVK 1st Year Anniversary: மக்களின் ஆதரவு இல்லாமல், எந்த அரசையும் உங்களால் உருவாக்க முடியாது. மன்னராட்சியை தொடர முடியாது.

செங்கல்பட்டு மாவட்டம், பூஞ்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில்,தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதர் அர்ஜூனா பேசியதாவது:
’’தளபதி என்று அழைத்து வந்திருந்த நாம், தலைவர் என்று அழைக்கக்கூடிய பரிணாமத்திற்கு மாறி இருக்கிறோம். சூழ்ச்சிகள் பல என்னைச் சூழ்ந்தபோது விஜய்தான் என்னை அழைத்துப் பேசினார்.
தமிழக அரசின் கடன் இன்று ரூ.9 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. 15 ஆண்டுகளில் அதிமுக வாங்கிய கடனை, 4 ஆண்டுகளில் திமுக வாங்கியுள்ளது. கொள்கைகளை பேசி, மக்களிடையே கவர்ச்சி வார்த்தைகளைப் பேசி ஏமாற்றுகிறார்கள். கடனை வாங்கி அதில் ஊழல் செய்கிறார்கள்.
மக்களின் ஆதரவு இல்லாமல், எந்த அரசையும் உங்களால் உருவாக்க முடியாது
எம்ஜிஆரையும் நடிகர் என்றீர்கள். அவர் உயிருடன் இருக்கும்வரை உங்களால் ஆட்சிக்கு வர முடியவில்லை. மக்களின் ஆதரவு இல்லாமல், எந்த அரசையும் உங்களால் உருவாக்க முடியாது. மன்னராட்சியை தொடர முடியாது.
விஜயை நகல் செய்கிறார்கள். முதல்வரும் விஜய் ரசிகர்தான். விஜயின் பேண்ட், சட்டையைக் கூட காப்பி அடித்து வருகின்றனர்.
எங்களுக்குள் பிரச்சனை என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் ரொம்ப கிளியராக இருக்கிறோம். அண்ணன் நம்பர் ஒன், அண்ணன் இண்டஸ்ட்ரியல் நம்பர் ஒன்.
துணை முதலமைச்சர் ஆக வேண்டும்
ஒரு சிலர் சினிமாவில் நடித்தார்கள், நடித்த உடன் பிரபலமாக வேண்டும், பிரபலமான உடன் துணை முதலமைச்சர் ஆக வேண்டும். அவ்வளவுதான் அவர்களுடைய எண்ணம்.
இங்கு உண்மையாக இருந்து நம்பர் ஒன் ஆக வேண்டும். அதற்கு ஒரு தைரியம் மற்றும் உழைப்பு வேண்டும். அதற்கு ஒரு மக்கள் ஆதரவு இருக்க வேண்டும். மக்கள் ஆதரவில்லாமல் யாராலும் நம்பர் ஒன் ஆக முடியாது.
சிறைக்கும் செல்வோம். கோட்டைக்கும் செல்வோம்.
நாங்கள் சிறைக்கும் செல்வோம். கோட்டைக்கும் செல்வோம். நாம்தான் எதிர்க்கட்சி. எங்கள் தலைவர்தான் எதிர்க்கட்சித் தலைவர். 1967 இல் மற்றும் 1977-ல் நடைபெற்றது இப்போது நடைபெறும். எங்களிடம் பணம் இல்லாமல் இருக்கலாம் உழைப்பு, தைரியம், நல்ல தலைவன் அதோடு சேர்ந்து உண்மையான கொள்கைகள் உள்ளன.
உங்களின் கூட்டணி உடையும். 2011 நிலவரம் நினைவில் இருக்கிறதா? 234 தொகுதிகளிலும் அதிமுக வென்றது. உங்களால் எதிர்க்கட்சி கூட ஆக முடியவில்லை. மக்களிடம் 1000 ரூபாய் கொடுத்து 10 ஆயிரம் ரூபாயைப் பிடுங்கிக் கொண்டிருக்கிறீர்கள்’’.
இவ்வாறு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதர் அர்ஜூனா ஆவேசமாகப் பேசினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

