Madras high court: சென்னை உயர்நீதிமன்றம் வாசல் நாளை இரவு முதல் நாளை மறுநாள் வரை மூடல்..! ஏன் தெரியுமா..?
சென்னை உயர் நீதிமன்றத்தில் அனைத்து வாயில்களும் நாளை இரவு முதல் நாளை மறுநாள் இரவு வரை மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் அனைத்து வாயில்களும் இன்றிரவு முதல் நாளை இரவு வரை மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற வாசல் மூடல் :
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் உயர் நீதிமன்றம் கட்டப்பட்டதால் இப்பகுதிகளில் வசித்த மக்கள் உயர்நீதிமன்றத்தை சுற்றி செல்ல வேண்டிய நிலை உருவானது. நாளடைவில் அது அதிக தூரமாக கருதி உயர் நீதிமன்ற வளாகத்தை வழிப்பாதையாக பயன்படுத்தத் தொடங்கினர்.
இதை கவனத்தில் கொண்ட நீதிமன்ற நிர்வாகம், மக்கள் வருங்காலங்களில் நீதிமன்ற வளாக வழிப்பாதைகளை உரிமை கோரி விடக் கூடாது என்பதற்காக நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் வருடத்தில் மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மூடப்படுவது ஏன்..?
இந்த நடைமுறை ஒவ்வொரு வருடத்தின் டிசம்பர் முதல்வாரத்தின் சனிக்கிழமையில் கடைப்பிடிப்பது வழக்கம் அதன்படி இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்படும் என்றும் இந்த நேரத்தில் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என யாருக்கும் நீதிமன்றத்தில் நுழைய அனுமதி இல்லை என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே, பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் 1,200 கிலோ மீட்டர் நீள கடற்கரையில் பல்வேறு காரணங்களால் கடல் அரிப்பு ஏற்பட்டு, மீனவ சமுதாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி மீனவர் தந்தை செல்வராஜ்குமார் மீனவர் நல சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடல் பாதுகாப்பு :
அதில், கடல் அலை, கடல் உள்வாங்குவது, நீரோட்ட மாற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
திருவாரூரில் சாலையில் நடமாடிய குதிரைகள், மாடுகள்; செய்வதறியாது திகைத்த நகராட்சி ஊழியர்கள்..!
தமிழகத்தில் 50 கடற்கரை கிராமங்கள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடல் அரிப்பை தடுப்பதற்கான திட்டத்தை அமல்படுத்தும்படி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், தமிழகத்தில் பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரை கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.