மேலும் அறிய

Maaveeran Issue: கொடியால் வந்த பிரச்னை... மாவீரன் படத்துக்கு எதிரான வழக்கு... சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்திய ஜனநாயகக் கட்சியின் கொடியை பிரதிபலிக்காத வகையில் மாவீரன் படக்காட்சிகளை மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரும் ஜூலை 14ஆம் தேதி சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடிப்பில் மாவீரன் திரைப்படம் வெளியாகவுள்ளது.  இந்நிலையில் முன்னதாக வெளியான மாவீரன் படத்தின் ட்ரெய்லரில் இந்திய ஜனநாயகக் கட்சியை பிரதிபலிக்கும் கொடிகள் இடம்பெற்றிருந்தன.

கொடியால் வந்த பிரச்னை

இந்நிலையில், மாவீரன் படத்தில் இடம்பெறும் கொடியின் நிறத்தை மாற்ற வேண்டும் என்றும், அவ்வாறு மாற்றம் செய்யப்படாமல் இத்திரைப்படம் வெளியிடப்படுமாயின் படத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்றும் கோரி ஐஜேகே பொதுச்செயலாளர் பி.ஜெயசீலன் முன்னதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது.

உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்த விசாரணையைத் தொடர்ந்து இந்திய ஜனநாயகக் கட்சியின் கொடியை பிரதிபலிக்காத வகையில் மாவீரன் படக்காட்சிகளை மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் மாவீரன் திரைப்படத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியையும் குறிப்பிடவில்லை என பொறுப்புதுறப்பு வாசகங்களை திரையரங்குகளில் வெளியிட வேண்டும். அதேபோல் கொடியின் நிறத்தில் மாற்றங்கள்  செய்த பிறகே ஓடிடி தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் இப்படம் வெளியிடப்பட வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பைலிங்குவல் திரைப்படம்

மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் இரண்டாவதாக வெளியாகும் திரைப்படம் மாவீரன். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் சரிதா, யோகி பாபு, மிஸ்கின் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். 

தமிழ், தெலுங்கு என பைலிங்குவல் படமாக இப்படம் வெளியாகிறது. நாளை மறுநாள் படம் வெளியாகும் நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட ப்ரொமோஷன் பணிகளை படக்குழு முழிவீச்சில் மேற்கொண்டு வருகிறது.

விஜய் சேதுபதியின் குரல்

இந்நிலையில், நேற்று இப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாபாத்திரத்துடன் உரையாடும் குரல் பற்றிய அப்டேட் வெளியானது. இப்படத்தின் ட்ரெய்லரில் “காதுல ஒரு குரல் கேட்டுட்டே இருக்கு” என சிவகார்த்திகேயன் கூறும் வசனம் கவனம் ஈர்த்த நிலையில், சிவகார்த்திகேயன் எதற்காக மேலே பார்க்கிறார் என ரசிகர்கள் ஆராய்ச்சி செய்து பல கோணங்களில் கருத்துகளை இணையத்தில் முன்வைத்து வந்தனர்.

இந்நிலையில், ‘வீரமே ஜெயம்’  என விஜய் சேதுபதி பேசும் வசனத்துடன் மாவீரன் படக்குழு நேற்று ஒஎரு காட்சியை பகிர்ந்திருந்தது.  நடிகர் சிவகார்த்திகேயனும் இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்து பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Past Lives Review: காலங்கள் இடையே நடக்கும் காதல் போராட்டம்.. ‘Past Lives’ திரைப்படத்தின் முழு விமர்சனம் இதோ..!

Mission Impossible 7 Review: தங்கத்தட்டில் தரமான ஆக்‌ஷன் விருந்து... மிரள வைத்தாரா டாம் க்ரூஸ்? மிஷன் இம்பாசிபள் 7 விமர்சனம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: அனுமதி கொடுத்த காவல்துறை... பரந்தூர் பறக்கும் விஜய்.. பின்னணி என்ன?
TVK Vijay: அனுமதி கொடுத்த காவல்துறை... பரந்தூர் பறக்கும் விஜய்.. பின்னணி என்ன?
Union Budget 2025-26: மாறப்போகும் நிதிநிலை..! குறையுமா வரி? உயருமா வருமானம்? - பிப்.1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட்
Union Budget 2025-26: மாறப்போகும் நிதிநிலை..! குறையுமா வரி? உயருமா வருமானம்? - பிப்.1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட்
TVK Vijay: கோட்டைவிட்ட விஜய் - புலம்பும் தவெக நிர்வாகிகள் - ஈரோடு கிழக்கில் சீமான் அறுவடை பலிக்குமா?
TVK Vijay: கோட்டைவிட்ட விஜய் - புலம்பும் தவெக நிர்வாகிகள் - ஈரோடு கிழக்கில் சீமான் அறுவடை பலிக்குமா?
சென்னை ரிட்டர்ன் வர்றீங்களா? எக்கச்சக்க மாற்றங்கள்! வாகன ஓட்டிகளே உஷார்..!
சென்னை ரிட்டர்ன் வர்றீங்களா? எக்கச்சக்க மாற்றங்கள்! வாகன ஓட்டிகளே உஷார்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கையை விரித்த கூட்டணியினர்! கழற்றி விடப்பட்ட காங்கிரஸ்! என்ன செய்யப் போகிறார் ராகுல்?BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: அனுமதி கொடுத்த காவல்துறை... பரந்தூர் பறக்கும் விஜய்.. பின்னணி என்ன?
TVK Vijay: அனுமதி கொடுத்த காவல்துறை... பரந்தூர் பறக்கும் விஜய்.. பின்னணி என்ன?
Union Budget 2025-26: மாறப்போகும் நிதிநிலை..! குறையுமா வரி? உயருமா வருமானம்? - பிப்.1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட்
Union Budget 2025-26: மாறப்போகும் நிதிநிலை..! குறையுமா வரி? உயருமா வருமானம்? - பிப்.1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட்
TVK Vijay: கோட்டைவிட்ட விஜய் - புலம்பும் தவெக நிர்வாகிகள் - ஈரோடு கிழக்கில் சீமான் அறுவடை பலிக்குமா?
TVK Vijay: கோட்டைவிட்ட விஜய் - புலம்பும் தவெக நிர்வாகிகள் - ஈரோடு கிழக்கில் சீமான் அறுவடை பலிக்குமா?
சென்னை ரிட்டர்ன் வர்றீங்களா? எக்கச்சக்க மாற்றங்கள்! வாகன ஓட்டிகளே உஷார்..!
சென்னை ரிட்டர்ன் வர்றீங்களா? எக்கச்சக்க மாற்றங்கள்! வாகன ஓட்டிகளே உஷார்..!
Israel Hamas War: அடடா..! காஸா போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்..! என்று முதல் அமல் தெரியுமா?
Israel Hamas War: அடடா..! காஸா போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்..! என்று முதல் அமல் தெரியுமா?
அடேங்கப்பா! தமிழ்நாட்டின் 5 முதலமைச்சர்கள் சேந்து நடிச்ச ஒரே படம் இதுதான்!
அடேங்கப்பா! தமிழ்நாட்டின் 5 முதலமைச்சர்கள் சேந்து நடிச்ச ஒரே படம் இதுதான்!
Rasipalan Today: மேஷத்திற்கு திறமை வெளிப்படும்; ரிஷபத்திற்கு மகிழ்ச்சியான நாள்: இன்றைய ( 18-01-2025 ) ராசி பலன்.!
மேஷத்திற்கு திறமை வெளிப்படும்; ரிஷபத்திற்கு மகிழ்ச்சியான நாள்: இன்றைய ( 18-01-2025 ) ராசி பலன்.!
OTT Release: சூது கவ்வும் 2 முதல் அலங்கு வரை! வீக் எண்டில் OTT--யில் பார்க்க இத்தனை படங்கள் ரிலீசா?
OTT Release: சூது கவ்வும் 2 முதல் அலங்கு வரை! வீக் எண்டில் OTT--யில் பார்க்க இத்தனை படங்கள் ரிலீசா?
Embed widget