மேலும் அறிய

தமிழ்நாட்டை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி! - 4 நாட்களுக்கு கனமழை: எப்போது எந்தெந்த மாவட்டங்களில்? 

சென்னையில் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்

சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு நாளை மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சென்னை உட்பட 12 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி நகர்கிறது. சென்னையில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், மன்னார்வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். அதிகபட்சமாக சென்னை பெருங்குடியில் 8 செ.மீ மழை பதிவாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை இயல்பைவிட ஒரு சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது. வட தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிக்கிறது. 

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் சென்னை உட்பட 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 

நவம்பர் 15ஆம் தேதி 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும்” எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தெலுங்கு மக்களும் தமிழகத்தின் பகுதியானவர்கள்’ கஸ்தூரி வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து!
“குழுவில் இடமில்லை, ஆலோசிப்பதுமில்லை” அதிருப்தியில் அதிமுக செங்கோட்டையன்..?
“குழுவில் இடமில்லை, ஆலோசிப்பதுமில்லை” அதிருப்தியில் அதிமுக செங்கோட்டையன்..?
”எது அமைச்சர் நிகழ்ச்சியில் த.வெ.க. கொடியா?” பதறிய அதிகாரிகள் ;  உடனே சுருட்டி எடுத்த ஊழியர்கள்..!
”எது அமைச்சர் நிகழ்ச்சியில் த.வெ.க. கொடியா?” பதறிய அதிகாரிகள் ; உடனே சுருட்டி எடுத்த ஊழியர்கள்..!
MK Stalin slams EPS : “பொறுக்க முடியவில்லை, எடப்பாடி வயிறு எரிகிறது” பொங்கி எழுந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
MK Stalin slams EPS : “பொறுக்க முடியவில்லை, எடப்பாடி வயிறு எரிகிறது” பொங்கி எழுந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS mobile missing : ஓபிஎஸ்-க்கு இந்த நிலையா? மணிக்கணக்கில் WAITING! AIRPORT-ல் நடந்தது என்ன?S Ve Sekar VS Annamalai : ”திட்டம் தீட்டிய அண்ணாமலை!கண்டுகொள்ளாத மோடி”ஓரங்கட்டப்படும் சீனியர்கள்?Vistara Airline : கடைசியாய் ஒருமுறை..விண்ணில் பறக்கும் விஸ்தாரா!பிரியா விடை கொடுத்த பயணிகள்!RB Udhayakumar : EPS-ஐ நெருக்கும் EX அமைச்சர்கள்! குறுக்கே வரும் RB உதயகுமார்! OPS-க்கு ஆப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தெலுங்கு மக்களும் தமிழகத்தின் பகுதியானவர்கள்’ கஸ்தூரி வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து!
“குழுவில் இடமில்லை, ஆலோசிப்பதுமில்லை” அதிருப்தியில் அதிமுக செங்கோட்டையன்..?
“குழுவில் இடமில்லை, ஆலோசிப்பதுமில்லை” அதிருப்தியில் அதிமுக செங்கோட்டையன்..?
”எது அமைச்சர் நிகழ்ச்சியில் த.வெ.க. கொடியா?” பதறிய அதிகாரிகள் ;  உடனே சுருட்டி எடுத்த ஊழியர்கள்..!
”எது அமைச்சர் நிகழ்ச்சியில் த.வெ.க. கொடியா?” பதறிய அதிகாரிகள் ; உடனே சுருட்டி எடுத்த ஊழியர்கள்..!
MK Stalin slams EPS : “பொறுக்க முடியவில்லை, எடப்பாடி வயிறு எரிகிறது” பொங்கி எழுந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
MK Stalin slams EPS : “பொறுக்க முடியவில்லை, எடப்பாடி வயிறு எரிகிறது” பொங்கி எழுந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
Mohammed shami : ”அண்ணன் வரார் வழிய விடு..” ஆடுகளத்துக்கு திரும்பும் ஷமி
Mohammed shami : ”அண்ணன் வரார் வழிய விடு..” ஆடுகளத்துக்கு திரும்பும் ஷமி
Breaking News LIVE 12th Nov : டிச.31, ஜன.1 ஆகிய இரு நாட்களில் வள்ளுவர் சிலை வெள்ளி விழா - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE 12th Nov : டிச.31, ஜன.1 ஆகிய இரு நாட்களில் வள்ளுவர் சிலை வெள்ளி விழா - முதலமைச்சர் ஸ்டாலின்
ஓபிஎஸ்-க்கு இந்த நிலைமையா? - சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன ?
ஓபிஎஸ்-க்கு இந்த நிலைமையா? - சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன ?
”ஆளுநரை சந்திக்கலாமா, வேண்டாமா?” கூட இருக்கும் அறிவாளிகளால் குழம்பும் விஜய்..!
”ஆளுநரை சந்திக்கலாமா, வேண்டாமா?” கூட இருக்கும் அறிவாளிகளால் குழம்பும் விஜய்..!
Embed widget