கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்ற காதல் மனைவி - மனமுடைந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை
. கிருஷ்ணராயபுரம் அருகே காதல் மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் அருகே காதல் மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள வளையல்காரன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி தங்க பாப்பா. இந்த தம்பதியின் மகன் அருண்குமார் கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த அபிநயா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அருண்குமார் அபிநயா கரூரில் தனியாக வீடு எடுத்து தங்கி அப்பகுதியில் கூலி வேலைக்குச் சென்று வந்தனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று அருண்குமாருக்கும், அபிநயாவுக்கும் இடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அபிநயா தனது கணவருடன் கோபித்துக் கொண்டு தனது தாய் வீடான வளையல்காரன் புதூருக்கு சென்று விட்டார்.
இதனால் மணமுடைந்து காணப்பட்ட அருண்குமார் தனது சொந்த ஊரான வளையல் காரன் புதூரில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் 100 நாள் வேலைக்குச் சென்ற தங்க பாப்பா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மகன் அருண்குமார் தூக்கில் பிணமாக தூங்கியதை பார்த்து கதறி அழுதார். இது குறித்து மாயனூர் போலீசாருக்கு தகவல் தெரிவு தெரிவிக்கப்பட்டது. அதன் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அருண்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி மோதியதில் பள்ளி மாணவன் பலி
சின்னதாராபுரம் அருகே லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவர் உயிரிழந்தார். சின்னதாராபுரம் அடுத்துள்ள சின்னபுளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் யுவேந்திரன். இவர் எழவனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார் யுவேந்திரன் மாலை 5:20 மணி அளவில் பள்ளிக்குச் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். சின்னதாராபுரம் அரவக்குறிச்சி சாலையில் சின்னபுளியம்பட்டி பிரிவு அருகே திரும்பும் போது எதிரே வந்த லாரி மோதியதில் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் யுவேந்திரன் வழியிலே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சின்ன தாராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சாலை விபத்தில் லாரி டிரைவர் படுகாயம்
கிருஷ்ணராயபுரம் கரூர் மாவட்டம் குப்பம் பகுதி சேர்ந்தவர் ஆபிரகாம் லாரி டிரைவர் ஆன இவர் சம்பவத்தன்று லாரியை மாயனூரில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சாலையோரம் நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வெகுகல்பட்டியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் ஓட்டி வந்த மற்றொருவர் எதிர்பாராத விதமாக சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த ஆபிரகாம் இருந்த லாரி மீது மோதியது இதில் ஆப்ரஹாம் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து மாயனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.