Aavin : ஆவின் நிறுவனத்தில் தேவையற்ற இயந்திர கொள்முதல்..! 18 கோடி வரை இழப்பு..!
ஆவின் நிறுவனத்தில் தேவையற்ற இயந்திர கொள்முதல் மூலம் ரூபாய் 18 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச்சங்கத் தலைவர் பொன்னுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச்சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவினில் கடந்த அதிமுக ஆட்சியின் போது பல்வேறு ஒன்றியங்களின் பால் பண்ணைகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான இயந்திர தளவாடங்கள் வாங்கி பயன்படுத்தப்படாமலேயே வீணடிக்கப்பட்டது. குறிப்பாக கோவை ஒன்றியத்திற்குட்பட்ட ஆவின் பால் பண்ணையில் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திர தளவாடங்கள் வாங்கப்பட்டு அவை பயன்படுத்தப்படாமல் மழையிலும், வெயிலிலும் கிடப்பில் போடப்பட்டு வீணாகி அதன் மூலம் பெருத்த இழப்பு ஏற்பட்டது.
அதுபோல மதுரை ஒன்றியத்திற்குட்பட்ட ஆவின் பால் பண்ணையில் சுமார் 18 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட சோலார் இயந்திரங்கள் உரிய பயன்பாடு இன்றி அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மதுரை ஒன்றியத்திற்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதிகாரிகள் தாங்கள் ஆதாயம் அடைய வேண்டும் என்பதற்காக இது போன்று ஆவினுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படக் கூடிய வகையில் தேவையற்ற செலவை ஏற்படுத்தி அதன் மூலம் பெருத்த இழப்பு ஏற்பட காரணமாக இருந்திருப்பதாக தொடர்ச்சியாக கிடைக்கும் தகவல்கள் கடும் அதிர்ச்சியளிப்பதாகவே இருக்கிறது.
இந்த நிலையில், அதிமுக ஆட்சிக்கு திமுக ஆட்சி கொஞ்சமும் சளைத்ததல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் ஆவினின் 18 ஒன்றியங்களில் இயங்கும் பால் பண்ணைகளுக்கு கொழுப்பு சத்து (FAT), திடசத்து (SNF) மற்றும் கலப்படத்தை பகுப்பாய்வு செய்யும் மில்க் அனலைசர் இயந்திரங்களை சுமார் 18 கோடி ரூபாய் மதிப்பில் வாங்க அதிகாரிகள் அவசரகதியில் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
மேலும் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் "மில்க் அனலைசர் இயந்திரங்கள் வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட ஒன்றியங்களின் நிர்வாகக்குழு தீர்மானம் நிறைவேற்றி ஆர்டர் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் தங்களுக்கு, தேவையானதை ஒன்றியங்கள் தரப்பில் இருந்து கேட்காத போது அது போன்றதொரு இயந்திரத்தை புதிதாக வாங்கி ஆவின் ஒன்றியங்களுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தக் கூடிய வகையில் செயல்பட்டு சுமார் 18 கோடி ரூபாய்க்கு - மில்க் அனலைசர் இயந்திரங்கள் வாங்கி வீணடிப்பது என்பது முற்றிலும் அதிகாரிகள் தங்களின் சுய ஆதாயத்திற்காக தானே அன்றி வேறொன்றும் இல்லை.
ஏற்கனவே ஒவ்வொரு ஆவின் ஒன்றியங்களின் பால்' பண்ணைகளிலும் கொழுப்பு சத்து (FAT). திடசத்து S.N F ) மற்றும் கலப்படம் உள்ளிட்ட எல்லாவிதமான பகுப்பாய்வுகளையும் செய்யும், "மில்கோ ஸ்கீமர் அல்லது "மில்கோ ஸ்கேனர் இயந்திரங்கள் தற்போது பயன்பாட்டில் இருக்கும் போது அது போன்றதொரு இயந்திரத்தை புதிதாக வாங்க வேண்டிய அவசியம் என்ன என்பது புரியாத புதிராக இருப்பது மட்டுமல்ல இது முழுக்க, முழுக்க அதிகாரிகளின் தேவைகளுக்காகவே திட்டமிட்டு நிறைவேற்றிப்படுவது போல் தெரிகிறது.
இதற்கெல்லாம் காரணமாக இருப்பது கடந்த அதிமுக ஆட்சியில் கோவையில் தேவையற்ற இயந்திரங்களை வாங்கி கிடப்பில் போடப்பட்ட விவகாரத்தில் அப்போது பொது மேலாளராக இருந்தவர்களில் ஒருவரும், தற்போது ஆவின் இணையத்தில் ப்ளானிங் பிரிவு அலுவலராக இருக்கும் ராஜேஷ்குமார் என்பவரின் வழிகாட்டுதலில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்களுக்கு "மில்க் அைைலசர்" தவறான தகவல்கள் கொடுக்கப்பட்டதால் தான் மேற்கூறிய இயந்திர்ங்கள் அவசரகதியில் வாங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இது தொடர்பாக ஒன்றியங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழு ஒருக்கும் போது அவர்களின் நிர்வாக்கக்குழு தீர்மானம் மூலம் கேட்புரிமை இசைவு பெறாமல், ஒரு இயந்திரமும் சுமார் 8 2 லட்ச ரூபாய் செலவில், அந்தந்த மாவட்ட ஒன்றிய வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் செலவினம் ஒதுக்கீடு செய்யாத நிலையில் தன்னிச்சையாக முடிவெடுத்து அவசர கதியில் கொள்முதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் உ வேடிக்கை என்னவென்றால் புதிதாக வாங்கவிருக்கும் இந்த இயந்திரத்தை வைப்பதற்கு போதிய இட வசதி கூட பல ஒன்றியங்களில் இல்லை என்பது வேதனையளிக்கிறது.
இந்த இயந்திரத்தின் மூலம் பெறப்படும் பகுப்பாய்வுகளை கண்டுபிடிக்கும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மில்கோ ஸ்கேனர் ஒன்றின் விலை 3.5லட்சத்திலிருந்து 4 லட்சம் மட்டும் தானாம் அதே போல், மில்கோ எஸ்கிமர் இயந்திரத்தின் விலை 3லட்சத்துக்குள் மட்டும் தானாம். அப்படியிருக்கையில் தற்போது ஒரு இயந்திரத்திற்கு கூடுதலாக சுமார் 79லட்சம் ரூபாய் வரை செலவு செய்து சுமார் 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாங்க வேண்டிய நிர்பந்தம் என்ன?
இது தொடர்பான கோப்பில் கையொப்பமிட மறுத்த அலுவலர் மிரட்டப்பட்டு, கையொப்பம் பெறப்பட்டதாக ஆவின் வட்டாரத்தில் கூறப்படும் செய்திகளையும் நம்மால் அவ்வளவு எளிதாக கடந்து செல்ல முடியாது. ஏனெனில் இதே பாணியில் தான் கடந்த ஆட்சியில் பால் கூட்டுறவு ஒன்றயங்களில் இயந்திர கொள்முதல் நடைபெற்று அது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு விசாரணையில் எண்ணற்ற புகார்கள் குவிந்து கிடக்கின்றன.
ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதைப் போல ஆவினில் உள்ள அதிகாரிகள் இங்கிருந்து அங்கும். அங்கிருந்து இங்குமாக உதாரணத்திற்கு கோவையில் இருந்து சென்னை சென்னையில் இருந்து விழுப்புரம் என இப்படியே இடமாற்றம் மட்டுமே நடைபெற்று வருவதால் ஆவினில் நடைபெறும் முறைகேடுகளும், ஊழல்களும் முற்றுப் பெறாமல் தொடர்கதையாகவே இருக்கிறது.
எனவே ஆவின் இணையம் மற்றும் ஒன்றியங்களுக்கு தேவையின்றி கூடுதல் நிதிச் சுமையை உருவாக்கி அதன் மூலம் ஆவினுக்கு கடுமையான இழப்பை ஏற்படுத்தி தங்களின் கஜானவை திரப்பிக் கொள்ள துடிக்கும் கறுப்பு அதிகாரிகளை கூண்டோடு பணி நீக்கம் செய்வதோடு அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து, தேவையற்ற மில்க் அனலைசர் இயந்திரங்கள் கொள்முதல் செய்வதை நிறுத்தி ஆவினுக்கு ஏற்பட இருக்கும் சுமார் 1 8 கோடி ரூபாய் இழப்பை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் "மில்க் அனலைசர்’ இயந்திரங்கள் வாங்குவது தொடர்பான கோப்பில் கையெழுத்து போட மறுத்த அலுவலர் மிரட்டப்பட்டு கையொப்பம் பெறப்பட்டது தொடர்பாக உரிய விசாரணை நடத்தவும் உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தமிழக முதல்வர் அவர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.