மேலும் அறிய

CM Stalin: "சமூக நீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்?” முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

பாஜக பற்றி தெரிந்தே அவர்களின் கூட்டணிக்கு ராமதாஸ் சென்றுள்ளார் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயாக நாடாக கருதப்படும் இந்தியாவில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இதனையொட்டி, திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன.

தருமபுரியில் ஸ்டாலின் பரப்புரை:

அந்த வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சியில் இருந்து தனது பரப்புரையை தொடங்கிய நிலையில், இன்று தருமபுரியில் பரப்புரையை மேற்கொண்டார். தருமபுரியில்  தடங்கம் கிராமத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து  முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.  இதனை அடுத்த, பொதுகூட்டத்தில்  பேசிய அவர், "எழுச்சிமிக்க தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை ஒரு மாநாடு போல் ஏற்பாடு செய்துள்ளார்கள். இந்திய வரலாற்றிலேயே மிக முக்கியமான தேர்தல் இது.

ஜனநாயகத்துக்கும், தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கும், எதிர்கால சந்ததியினரை காக்க நீங்கள் வாக்களிக்க வேண்டும். அரசியல் சட்டம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் பாஜக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். பாஜக என்பது சமூகநீதிக்கு சவக்குழி தோண்டும் கட்சி. பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கும் கடமை சமூக நிதி மண்ணான தமிழ்நாட்டுக்குத்தான் பெரும் பங்கு உண்டு” என்றார் ஸ்டாலின். 

”சமூக நீதிக்கு எதிராக உள்ள பாஜகவுடன் கைகோர்த்ததன் மர்மம் என்ன?

தொடர்ந்து பேசிய அவர், "ஆதி திராவிடர், பழங்குடியினர் மக்களை சமூக பொருளாதாரம், கல்வியில் உயர்த்த அனைத்து முயற்சிகளையும் திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. நான் பெரிதும் மதிக்கின்ற சமூக நீதி பேசும் பாமக நிறுவனர் ராமதாஸ் தற்போது பாஜகவுடன் எப்படி கூட்டணி அமைத்தார்?

சமூக நிதி பேசும் ராமதாஸ், சமூக நீதிக்கு எதிராக உள்ள பாஜகவுடன் கைகோர்த்ததன் மர்மம் என்ன? பாமக வலியுறுத்தும் கொள்கைகளில் ஒன்றைக் கூட ஆதரிக்காத பாஜகவுடன் ராமதாஸ் கூட்டணி வைத்தது ஏன்? பாஜக கூட்டணிக்கு ராமதாஸ் ஏன் சென்றார் என்பது அவர்களின் கட்சிக்காரர்களுக்கே தெரியும்.

மனது இல்லாமல் பாஜக கூட்டணிக்கு ராமதாஸ் சென்றார் என்பது பாமகவினருக்கே தெரியும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பாமகவுக்கு மோடி கியாரண்டி கொடுத்தாரா? சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான உத்தரவாதத்தை மோடியிடமோ, அமித்ஷாவிடமோ ராமதாஸ் பெற்றிருக்கிறாரா? சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவும் இடஒதுக்கீட்டை அதிகரிக்கவும் வாக்குறுதி கொடுத்த ஒரே தேசியக் கட்சி காங்கிரஸ். பாஜக பற்றி தெரிந்தே அவர்களின் கூட்டணிக்கு ராமதாஸ் சென்றுள்ளார்.

திராவிட மாடல் அரசின் திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின்பற்றும் வகையில் நல்லாட்சியை நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டைப் போன்று டெல்லியிலும் நல்லாட்சி மலர வேண்டும் என பாடுபட்டு வருகிறோம். மக்கள் விரோத பாஜக அரசால் தொடர்ந்து உயர்த்தப்பட்ட  பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்” என்றார் முதலமைச்சர் ஸ்டாலின். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
"யப்பா" - 2 MATHS PERIOD: அமித்ஷாவின் ரியாக்ஷனை வைத்து மோடியை கலாய்த்த பிரியங்கா காந்தி
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Embed widget