Akshaya Tritiya 2021: அக்சய திருதியைக்காக கடையை திறந்த நகை கடைகள் பூட்டி சீல் வைப்பு
கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்தும் வகையில் திறக்கப் பட்டிருந்த நகைக்கடை அடகு கடை உள்ளிட்டவற்றை பூட்டி சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் கடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரித்தனர்
மன்னார்குடியில் ஊரடங்கு உத்தரவை மீறி திறக்கப்பட்ட நகை கடைகளை பூட்டி சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது இந்நிலையில் தமிழகத்தில் தற்பொழுது கொரோனா பெருந்தொற்றின் வேகம் அதிவேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அறிவித்து நடைமுறையில் உள்ளது இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .
அதனையொட்டி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு கடைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
காவல் துணை கண்காணிப்பாளர் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று முன்தினம் கடைவீதிகளில் ஆய்வு செய்து அனுமதி இன்றி திறக்கப்பட்ட கடைகளை மூடுமாறு எச்சரித்தனர் மேலும் திறக்கப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர் அதனைத் தொடர்ந்து அரசு கட்டுப்பாடுகளை மீறி நடப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று தமிழக அரசு எச்சரித்து இருந்த நிலையில் இன்று மன்னார்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர் .
அப்போது அரசு உத்தரவை மீறி கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்தும் வகையில் திறக்கப் பட்டிருந்த நகைக்கடை- மற்றும் அடகு கடை உள்ளிட்டவற்றை பூட்டி சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் கடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரித்தனர். இன்று அக்சய திருதியை என்பதால் அதற்கான வியாபாரத்திற்காக கடை திறந்துள்ளனர். இனிவரும் காலங்களில் அரசின் உத்தரவை மீறி கடைகள் திறந்தால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்து அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் மதியம் 12 மணிக்கு மேல் வாகனத்தில் சுற்றி திரிந்தவர்களை காவல்துறையினர் மறித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்