மீண்டும் உள்ளாட்சி தினம்; ஆண்டுக்கு 6 கிராமசபை கூட்டம் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி ஆண்டுதோறும் உள்ளாட்சி தினம் மீண்டும் நவம்பர் 1ஆம் தேதியன்று கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
#BREAKING | சிறந்த கிராம ஊராட்சிக்கு இந்தாண்டு முதல் உத்தமர் காந்தி விருது தரப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் https://t.co/wupaoCQKa2 | #TNAssembly #MKStalin #DMK pic.twitter.com/ZnrFaceyw9
— ABP Nadu (@abpnadu) April 22, 2022
இதுதொடர்பாக பேசிய முதலமைச்சர், தமிழ்நாட்டில் இனி ஆண்டுக்கு 4க்கு பதில் 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும். ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2, மார்ச் 22 தண்ணீர் தினம் ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படும். உள்ளாட்சி அமைப்பின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். கிராம ஊராட்சி தலைவர், உறுப்பினர்களுக்கான அமர்வு படித்தொகை 5 மடங்கு உயர்த்தப்படும். அரசின் அறிவிப்பால் 1.10 லட்சம் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பயனடைவர். அனைத்து ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்களுக்கு புதிய வாகனங்கள் வழங்கப்படும். ஊராட்சி தலைவருக்கான அறை, கூட்ட அரங்கம், செயலருக்கான அறை உள்ளிட்டவற்றுடன் கிராம செயலகம் கட்டப்படும். அரசின் திட்டங்களை செயல்படுத்திட 600 ஊராட்சிகளில் கிராம செயலகங்கள் இந்த ஆண்டே கட்டப்படும். சிறந்த 37 ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது மற்றும் ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும்” என்று கூறினார்.
#BREAKING | அனைத்து ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் https://t.co/wupaoCQKa2 | #TNAssembly #MKStalin #DMK pic.twitter.com/TblIEdA1VN
— ABP Nadu (@abpnadu) April 22, 2022
TN Assembly Session LIVE: தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் உடனுக்குடன்...
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்