TN Assembly Session LIVE: நெடுஞ்சாலைத்துறையில் உள்தணிக்கை நடவடிக்கை - சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு
TN Assembly Session LIVE Updates: உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர். சட்டப்பேரவையில் நடக்கும் சம்பவங்கள் உடனுக்குடன் இங்கே..
LIVE

Background
நெடுஞ்சாலைத்துறையில் உள்தணிக்கை நடவடிக்கை - சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு
நெடுஞ்சாலைத்துறை உள்தணிக்கை செய்யப்படும் என்றும், ஒவ்வொரு வட்டத்திற்கும் தனித்தனியாக மே 1-ந் தேதி முதல் மே 7-ந் தேதி வரை தணிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் எ.வ.வேலு சட்டசபையில் தெரிவித்துளம்ளார்.
275 கல்லூரி விடுதிகளில் இணையவழி நூலகம் - அமைச்சர் ராஜகண்ணப்பன்
275 கல்லூரி விடுதிகளில் ரூ.2.20 கோடியில் இணையவழி நூலகம் அமைக்கப்படும். சலவைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோரை குழுவாக இணைத்து 25 நவீன சலவையகங்கள் ரூ.75 லட்சத்தில் ஏற்படுத்தப்படும். 10.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் ஆலோசித்து நல்ல முடிவெடுப்பார் - அமைச்சர் ராஜகண்ணப்பன்
விஷம பிரச்சாரத்தை எதிர்கட்சித் தலைவர் செய்து வருகிறார் - மின்வெட்டு குறித்த விவாதத்தில் செந்தில் பாலாஜி பேச்சு
அதிமுக ஐடி விங் மூலம் இல்லாத ஒன்றை இருப்பது போல் காட்டும் விஷம பிரச்சாரத்தை எதிர்க்கட்சித் தலைவர் செய்து வருகிறார் - மின்வெட்டு குறித்த விவாதத்தில் செந்தில் பாலாஜி பேச்சு
மின்வெட்டு விவகாரம் : சட்டபேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு
மின்வெட்டு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் விளக்கத்தை ஏற்க மறுத்து சட்டபேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு
தமிழ்நாட்டில் 41 இடங்களில் மட்டுமே மின்வெட்டு : அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழ்நாட்டில் 41 இடங்களில் மட்டுமே மின்வெட்டு ஏற்பட்டது எனவும், அதுவும் இன்று மாலைக்குள் சரிசெய்யப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

