மேலும் அறிய

வாழ்வாதாரம் பாதிப்பு...கரூரின் மினி பேருந்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுனர்கள்

கரூர் மாநகரப் பகுதியில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் திருச்சி பகுதியில் இருந்தும் ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பயணிகள் ரயில் மற்றும் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

கரூர் ரயில் நிலையத்தில் அனுமதி இன்றி செயல்படுவதாக மினி பேருந்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுனரால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாநகரப் பகுதியில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் திருச்சி பகுதியில் இருந்தும் ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பயணிகள் ரயில் மற்றும் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த ரயில் நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோ ஓட்டி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர்.

வாழ்வாதாரம் பாதிப்பு...கரூரின் மினி பேருந்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுனர்கள்

இந்த நிலையில் ரயில் நிலங்களில் ரயில் வரும் நேரத்தில் மினி பேருந்துகளை நிறுத்தி வைத்து பயணிகளை ஏற்றி செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது, அதே நேரத்தில் அரசு நகர பேருந்துகளும் இயக்கி வருவதால் ஆட்டோ ஓட்டுனர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.

பலமுறை மினி பேருந்து ஓட்டுனர்களை செயல்பாட்டை கண்டித்து புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறிய ஆட்டோ ஓட்டுநர்கள் இன்று காலை மினி  பேருந்து முற்றுகையிட்டு ஆட்டோவை முன்பு நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டோ ஓட்டுநர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை பாதிப்பை ஏற்படுத்த உள்ளது. மினி பேருந்து உரிய அனுமதியின்றி இயக்கப்படுகிறது என்று குற்றச்சாட்டு வைக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக கவனம் செலுத்தி அனுமதியின்றி இயக்கப்படும். 

வாழ்வாதாரம் பாதிப்பு...கரூரின் மினி பேருந்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுனர்கள்

மினி பேருந்துகளை தடை செய்து ஆட்டோ ஓட்டுநர்களான எங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் திறக்க வேண்டும்.

மேலப்பாளையம் கோயம்பள்ளி இடையே அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று வேலாயுதம் பாளையத்தில் நடந்த மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூர் செல்லும் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மோகன் குமார் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் லட்சுமி காந்தன், முன்னாள் மாவட்ட செயலாளர் ரத்தினம், மாவட்ட துணைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். முத்துசாமி வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் நாட்ராயன் கலந்து கொண்டு மாநில குழு முடிவுகள் பற்றி எடுத்துக் கூறினார். அரசு கலைக் கல்லூரியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து மாநில அளவிலான உயர் அதிகாரிகளை கொண்டு விசாரணை செய்திட வேண்டும் கல்லூரி கல்வி பேராசிரியர் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என உடற்கல்வி இயக்குனரை கேட்டுக்கொள்கிறது. மேலப்பாளையம் கோயம்பள்ளி இடையே அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாடத்தை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டில் கொண்டு வர வேண்டும்.

டிஎன்பிஎல் சிமென்ட் ஆலை முதல் மூர்த்தி பாளையம் வரை செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. சாலையை உட னடியாக சரி செய்ய வேண்டும் என டிஎன்பிஎல் நிர்வாகம் மற்றும் புகலூர் நகராட்சி நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறது. கரூர் மாநகராட்சி மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என கூட்டம் கேட்டுக் கொள்கிறது. வேலுச்சாமிபுரம், இந்திரா நகர், வழியாக செல்லும் சாலை மக்கள் நடக்கவே முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் குப்புசாமி சின்னகாளிமுத்து செல்வம் உள்ளிட்ட நிர்வாக குழு மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
TN Rain; கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை இரண்டாவது நாளாக விடுமுறை...!
இரண்டாவது நாளாக நாளை மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
TN Rain; கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை இரண்டாவது நாளாக விடுமுறை...!
இரண்டாவது நாளாக நாளை மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Embed widget