Rs.1000 Monthly Assistance For Women: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் எவையெவை? முழுவிபரம் இதோ..!
Rs.1000 Monthly Assistance For Women: கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் எவையெவை என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
![Rs.1000 Monthly Assistance For Women: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் எவையெவை? முழுவிபரம் இதோ..! List of Documents Required For Monthly 1000 Rs For Ladies in Tamil Nadu Women Assistance Scheme TN Rs.1000 Monthly Assistance For Women: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் எவையெவை? முழுவிபரம் இதோ..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/07/43dc6f2cf43e70003fe02060babccaf61688737383772102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் எவையெவை என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
இந்த திட்டத்திற்காக பிரத்யேகமான செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதில்,
1. விண்ணப்பிப்பவர் வாடகை வீட்டில் குடியிருக்கிறார்களா? அல்லது சொந்த வீட்டில் குடியிருக்கிறார்களா? என்ற தகவல் சமர்பிக்க வேண்டும்,
2. சொந்தமாக வாகனம் வைத்திருந்தால் அதற்கான ஆவணத்தை சமர்பிக்க வேண்டும்,
3. ஆதார் எண் சமர்பிக்கபட வேண்டும்,
4. குடும்ப அட்டை எண் உள்ளிட்ட ஆவணங்கள் சமர்பிக்க படவேண்டும்,
5. செல்போன் எண் அளிக்க வேண்டும்,
6. வங்கிக் கணக்கு எண் அளிக்க வேண்டும்,
7. புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும்,
8. எந்த மாவட்டம் என்பதை பதிவேற்றம் செய்ய வேண்டும்,
9. வயது என்ன என்பதை பதிவேற்றம் செய்ய வேண்டும்,
10. என்ன தொழில் செய்கிறார்கள் என்பதை குறிப்பிட வேண்டும்,
மகளிருக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை அளிப்பதற்காக இந்த ஆண்டு சமர்பிக்கப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட்டில் ரூபாய் 7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பயனாளருக்கான தகுதிகள்:
அதன்படி, ”மகளிர் உரிமைத்தொகையை பெற விரும்பும் பயனாளிகளுக்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். மகளிர் உரிமைத் தொகைக்கும் விண்ணப்பிக்கும் மகளிர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் அவசியம்
அதே நேரம், உச்ச வயது ஏதுமில்லை.
ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை வழங்க அரசு முடிவு. சொந்தமாக கார், டிராக்டர், ஜூப், கனரக வாகனம் வைத்திருப்போர், ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக கொண்டிருப்போருக்கு ரூ.1000 உரிமைத்தொகை கிடையாது. ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் வருவாய் பெறும் குடும்ப தலைவிகளுக்கு உரிமைதொகை கிடைக்காது. 5 ஏக்கர் மற்றும் அதற்கும் அதிகமான நன்செய் நிலம் வைத்து இருக்கும் குடும்ப தலைவிகளுக்கும், 10 ஏக்கர் புன்செய் மற்றும் அதற்கு அதிகமான நிலம் வைத்திருக்கும் குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத் தொகை இல்லை. பெண் எம்.எல்.ஏ., எம்.பி. மற்றும் பெண் அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படமாட்டாது. மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மட்டும் இல்லாமல், பொதுத்துறை நிறுவனங்களான வங்கிகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதார்களுக்கு இத்திட்டத்தின் கீழ் உரிமைத் தொகை வழங்கப்படமாட்டாது. வருமானவரி செலுத்துவோர், அரசின் வேறு நிதி உதவித் திட்டங்களில் பலன் பெறும் மகளிர் இந்த திட்டத்தில் பலன் பெற முடியாது. ஆண்டுக்கு 3600 யூனிட்க்கும் அதிகமான மின்சாரத்தை நுகர்வு செய்யும் குடும்பங்களுக்கு உரிமைத் தொகை கிடையாது.
திருநங்கைகள், திருமணமாகாதவர்கள், தனித்து இருப்போர், கைம்பெண்கள் தலைமையில் குடும்பம் இருந்தால் அவர்கள் குடும்பத்தலைவிகளாக கருதப்பட்டு அவர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், கடும் உடல் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பெறும் குடும்பங்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
எந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டை உள்ளதோ, அந்த கடையில் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும்” என அறிவுருத்தப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)