Pongal 2022: பொங்கல் - டாஸ்மாக்கில் ஒரேநாளில் மது விற்பனை எவ்வளவு கோடி தெரியுமா...? - டாப்பில் மதுரை...!
அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.144.74 கோடிக்கு டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.
பொங்கல் தினத்தன்று டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூ.317.08 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.
ஜனவரி 12ஆம் தேதி ரூ.155.06 கோடியும், ஜனவரி 13ஆம் தேதி ரூ.203.05 கோடியும் விற்பனையான நிலையில் நேற்று ரூ.317.08 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மதுரை மண்டலத்தில் 68.76 கோடி ரூபாயும், கோவை மண்டலத்தில் 59.65 கோடி ரூபாயும், சென்னை மண்டலத்தில் 59.28 கோடி ரூபாயும், திருச்சி மண்டலத்தில் 65.52 கோடி ரூபாயும், சேலம் மண்டலத்தில் 63.87 கோடி ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளன.
OPS on TASMAC: பள்ளி, கல்லூரிகளை மூடியாச்சு... டாஸ்மாக் மட்டும் ஏன்? - தடை கோரும் ஓபிஎஸ்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களில் ரூ.675.19 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. இதில், அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.144.74 கோடிக்கு டாஸ்மாக் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.
முன்னதாக, ஜனவரி 15ஆம் தேதி (இன்று) திருவள்ளூர் தினம் என்பதால் அன்றைய தினம் மதுக்கடைகள் மூடப்படும் என்று தமிழ்நாடு அறிவித்தது. மேலும், வரும் 18ஆம் தேதி வடலூர் வள்ளலார் நினைவு நாள் என்பதால் அன்றைய தினமும் மூடப்படும் என்று அறிவித்தது. இதுமட்டுமின்றி, ஆண்டுதோறும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுவதால் அன்றைய தினமும் மதுபானக் கடைகள் செயல்படாது என்றும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் கொரோனா நோய் தொற்று நெறிமுறைகள் பின்பற்றுவது குறித்து வெளியிடப்பட்ட அறிவுரைகள்.
1. மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டமாக இருக்கக்கூடாது. 2. இரண்டு வாடிக்கையாளர்களுக்கு இடையே 6 அடி தூர சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
3. ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் கடையில் அனுமதிக்கக் கூடாது. 4. அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தவறாது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் மற்றும் கையுறை, கிருமி நாசினி கொண்டு கைகள் சுத்தம் செய்தல் வேண்டும்.
5. முகக்கவசம் அணிந்து வரும் நுகர்வோர்களுக்கு மட்டுமே மது வகைகள் விநியோகிக்கப்பட வேண்டும். TASMAC Liquor Rates: ‛டாஸ்மாக் மது விலை...’ அமைச்சர் பதிலும், மதுப்பிரியர்கள் கருத்தும்... அப்படியே ராவாக!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்