TN RAIN: அடுத்த சில மணிநேரங்களில் எங்கெல்லாம் மழை? வானிலை ஆய்வு மையம் தகவல்..
திருவள்ளூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் அடுத்த சில மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
![TN RAIN: அடுத்த சில மணிநேரங்களில் எங்கெல்லாம் மழை? வானிலை ஆய்வு மையம் தகவல்.. latest rain forecast update for tamilnadu by indian meteorological department TN RAIN: அடுத்த சில மணிநேரங்களில் எங்கெல்லாம் மழை? வானிலை ஆய்வு மையம் தகவல்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/23/82d6d77d6c8d07b35cb322eacab45bcd1669203255704194_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வட தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நெமிலி, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை பகுதிகளில், 3 மணி நேரத்திற்கு, லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக, வானிலை மையத்தின் டிவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
RMC_Chennai_Autonowcast_Taluk_Experimental 2022-11-24-15:07:49 அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக நெமிலி,திருவள்ளூர்,ஊத்துக்கோட்டை பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது pic.twitter.com/JnYk7LkHUD
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 24, 2022
மழைக்கான வாய்ப்பு:
25.11.2022 முதல் 28.11.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு:
24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அதிகபட்சமழைப்ப்பொழிவு:
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பக்கத்தில், 10 சென்டி மீட்டர் மழையும், திருத்தனி மற்றும் காஞ்சிபுரத்தில் தலா 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்:
தெற்கு ஆந்திர நிலப்பரப்பு பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தற்பொழுது தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வருகிறது. இது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக இருந்து மேலும் வலு குறைந்து வருகிறது. 24 மணி நேரத்தில் வடக்கு அந்தமான் கடலோரப் பகுதிகளில் புதிதாக வளிமண்டல சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்திற்கு அடுத்து வரக்கூடிய ஐந்து தினங்களுக்கு பெரிய அளவிலான மழைக்கு வாய்ப்பு இல்லை. தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்து வரும் ஐந்து தினங்களில் ஓருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு மட்டும் வாய்ப்புள்ளது என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)