‛வேலையை பறித்த திமுகவினர்...’ வேலையிழந்த பெண் தற்கொலை... எஞ்சிய 3 பேர் முறையீடு!
பேரூராட்சியில் 4 பெண்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மீதமுள்ள பெண்கள் மீண்டும் வேலை வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குத்தாலம் பேரூராட்சி அலுவலகத்தில் சுகாதார பரப்புரையாளர்களாக பணியாற்றி வந்த 4 பெண்கள் அவர்களின் ஒப்பந்த காலம் நிறைவடைந்ததை அடுத்து அவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, வேலை இழந்த நான்கு பெண்களில் ஒரு பெண் அண்மையில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில் மீதமுள்ள 3 பெண்கள் தங்களுக்கு மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் நதியா, வேம்பு, ராதிகா, ஜெயா ஆகிய 4 பெண்கள் சுகாதார பரப்புரையாளர்களாக பணியாற்றி வந்தனர். கடந்த 7 ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்த இவர்களது ஒப்பந்தம் ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில் திமுகவினரின் தலையீட்டால் இந்த நான்கு பேரையும் வேலையை விட்டு நீக்கிவிட்டு திமுகவை சேர்ந்தவர்களுக்கு அந்த பணிகள் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த பணியை மீண்டும் தங்களுக்கே வழங்க வேண்டும் என 4 பெண்களும் கோரிக்கை விடுத்துவந்த நிலையில், வேலை போனதால் 2 பெண் குழந்தைகளுக்கு தாயான நதியா என்ற பெண், மனமுடைந்து கடந்த 5-ஆம் தேதி வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட அவரின் உறவினர்களை அவரை மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் உயிரிழந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
மயிலாடுதுறை: சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த அசைவ உணவகத்திற்கு சீல்!
அதனைத் தொடர்ந்து, எஞ்சிய 3 பேருக்கும் மீண்டும் வேலை வழங்கப்படவில்லை. இந்நிலையில், வேம்பு, ராதிகா, ஜெயா ஆகிய மூவரும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, அந்த பணியை தங்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 4 பேரூராட்சிகளிலும் ஒப்பந்த காலம் நிறைவடைந்து வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் அதே பணியில் நியமித்துள்ளனர் என்றும், குத்தாலம் பேரூராட்சியில் மட்டும் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள மறுப்பதாக பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம்சாட்டை தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை: குத்தாலத்தில் சிபிஎம், பாஜக இடையே மோதல் - பிரதமரை இழிவுப்படுத்தியதாக புகார்