மேலும் அறிய

கிருஷ்ணகிரி-ஓசூர்: போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி! புதிய மேம்பாலங்கள் திறப்பு, மக்கள் மகிழ்ச்சி!

கிருஷ்ணகிரி - ஓசூர் இடையே தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்த நிலையில் அங்கு கட்டப்பட்டு வந்த, 2 மேம்பாலங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி - ஓசூர் இடையே தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்த நிலையில் அங்கு கட்டப்பட்டு வந்த, 2 மேம்பாலங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி - ஓசூர் இடையே 2 மேம்பாலங்கள்  திறப்பு 

கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், அடிக்கடி விபத்து நடந்ததால், அதை தடுக்கும் பொருட்டு, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, மேலுமலை, சாமல்பள்ளம், கொல்லப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டது. இதனால், இச்சாலையில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இந்தியாவின் சிலிக்கான் வேலியாகவும் ஸ்டார்ட் அப் தலைநகரமாகவும் பெங்களூரு நகரம் இருக்கிறது. நாள்தோறும் இலட்சக்கணக்கான மக்கள் பெங்களூருக்கு சென்று வந்த வண்ணம் இருக்கின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வேலைக்காகவும் தொழில் நிமித்தமாகவும் நாள்தோறும் பெங்களூருக்கு பயணிக்கின்றனர்.

இந்நிலையில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன்பும், சாமல்பள்ளத்திலும் கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தின் பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை, தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், இந்த இரு மேம்பாலங்களின் மீது, வாகனங்களை ஓட்டி பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் பொது போக்குவரத்திற்காக இந்த மேம்பாலங்கள் திறந்து விடப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.  மேலும், கொல்லப்பள்ளி மேம்பாலத்தின் பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், விரைவில், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் எனவும், பின்னர் சூளகிரி - ஓசூர் இடையே கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் துரிதப்படுத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தர்மபுரி கிருஷ்ணகிரி ஓசூர் பெங்களூர் இடையே புதிய விரைவு ரயில்

தர்மபுரி கிருஷ்ணகிரி ஓசூர் பெங்களூர் இடையே புதிய விரைவு ரயில் . 138 கிலோ மீட்டரை நூறு  நிமிடங்களில் கடக்கும். பெங்களூரில் இருந்து 100 நிமிடத்தில் தர்மபுரி வரலாம். வித்திட்டத்திற்காக முன் மொழிவு கர்நாடக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது

இவர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையிலான ஒரு போக்குவரத்து திட்டம் குறித்து அறிவிப்பு தான் தற்போது வெளியாகி இருக்கிறது. மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பு என்று அழைக்கப்படும் ஆர்ஆர்டிஎஸ், இந்தியாவின் தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்துக் கழகம் என அழைக்கப்படும் என்சிஆர்டிசி-இன் கீழ் செயல்படுகிறது. இந்தியாவில் நகரங்களுக்கிடையிலான இணைப்பை வலுப்படுத்த ரயில் போக்குவரத்தை ஏற்படுத்துவதே இந்த அமைப்பின் நோக்கம்.

முதன்முறையாக 2023 ஆம் ஆண்டு டெல்லி மற்றும் மீரட் ஆகிய நகரங்களுக்கு இடையே முதல் மண்டல விரைவு போக்குவரத்து ரயில்வே தடம் அமைக்கப்பட்டது. கடந்த 2023 ஆம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கப்பட்டது மொத்தம் 82 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த ரயில் வழித்தடத்தில் 55 கிலோமீட்டர் தொலைவிற்கு பணிகள் முடிந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது இந்த என்சிஆர்டிசி அமைப்பு பெங்களூரிலும் இதே போன்ற இதேபோல நான்கு வழித்தடங்களில் மண்டல விரைவு ரயில் போக்குவரத்து வழித்தடத்தை ஏற்படுத்துவதற்கான பரிந்துரைகளை அனுப்பியுள்ளது.

இதன்படி பெங்களூரு - ஹோஸ்கோடே - கோலார் ஆகிய மூன்று பகுதிகளை இணைக்கும் வகையில் 65 கிலோமீட்டர் நீளத்திற்கு ஒரு வழித்தடம் , பெங்களூரு - மைசூர் இடையே 145 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒரு வழித்தடம், பெங்களூரு - துமகுரு இடையே 60 கிலோமீட்டர் நீளத்திற்கு ஒரு வழித்தடம் என கர்நாடக மாநிலத்திற்கு உள்ளேயே மூன்று வழித்தடங்களும் , பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டை இணைக்க கூடிய வகையில் பெங்களூரு- ஓசூர் -கிருஷ்ணகிரி- தர்மபுரி ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் 138 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஒரு வழி தடமும் அமைக்கலாம் என பரிந்துரை வழங்கி இருக்கிறது.

இந்த ரயில் சேவை நமோ பாரத் ரயில்களை இந்த வழித்தடத்தில் இயக்கலாம் என்றும் இந்த ரயில்கள் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யக் கூடியவை என்றும் அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக கர்நாடக மாநில அரசுக்கு அறிக்கை அளித்து இருக்கும் என்சிஆர்டிசி அதிகாரிகள் தற்போது டெல்லியில் இயங்கும் நமோ பாரத் ரயில்கள் மற்றும் அதன் வழித்தடங்களை வந்து நேரில் பார்வையிடும்படி கூறியுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
Embed widget