Martin: கேரள நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ. 2 கோடி வழங்கிய கோவை மார்ட்டின் குழுமம்
Kerala Landslide - Martin company: கேரள மாநிலம் வயநாட்டில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மார்ட்டின் குழும நிர்வாக இயக்குநர் சார்லஸ் மார்ட்டின் 2 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.
![Martin: கேரள நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ. 2 கோடி வழங்கிய கோவை மார்ட்டின் குழுமம் Kerala landslide affected people Rs. 2 crore donate by Coimbatore Martin company Martin: கேரள நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ. 2 கோடி வழங்கிய கோவை மார்ட்டின் குழுமம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/17/facb02bdfd38443f2b0fe1abf88e20641723908453827572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கடந்த ஜூலை 30 அன்று, கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவானது, ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த நிலச்சரிவில் 400 மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து அரசியல் கட்சி பேதம் இன்றியும் , சாதி -மதம் பேதமன்றியும் மக்கள் உதவி செய்ததை பார்க்க முடிந்தது.
இந்த தருணத்தில் நிலச்சரிவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள கோவை, மார்ட்டின் நிறுவனம், இந்த சவாலான நேரத்தில் அம்மக்களுக்கு உறுதுணையாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
வயநாட்டில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு முயற்சிகளுக்கு 2 கோடி ரூபாய் வழங்கியுள்ள மார்ட்டின் நிறுவனம், அதில் ஒரு கோடி ரூபாயை, முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கும், மேலும் ஒரு கோடி ரூபாயை, இயற்கை பேரிடர்களின் போது நிவாரண பணிகளில் தீவிரமாக ஈடுபட்ட ரோட்டரி சங்கம் மூலம் நிவாரணப் பொருட்கள், மருத்துவ உதவி மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளை விநியோகிக்கவும் வழங்கியுள்ளதாக மார்ட்டின் குழும நிர்வாக இயக்குநர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)