மேலும் அறிய

ABP Nadu Exclusive: பட்டியலின பெண் ஊராட்சி தலைவர்... ஒட்டுமொத்த தேர்தலை புறக்கணித்த மக்கள்! இது நவீன பாப்பாபட்டி!

அதிர்ச்சி அடைந்த மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர், சம்மந்தப்பட்ட ஊராட்சியில் உள்ள பணியாளர்களையாவது ஓட்டளிக்க முயற்சி மேற்கொள்ளுமாறு ஒன்றிய தேர்தல் பார்வையாளரிடம் வலியுறுத்தினார்.

பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம். இந்த மூன்று ஊர்களின் பெயரை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. மதுரை மாவட்டத்தில் பட்டியலின ஊராட்சி தலைவர் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உள்ளாட்சி தேர்தலை கேலிக்கூத்தாக்கிய செயல்பாடுகளால் அறியப்பட்ட ஊர்கள். கடந்த 2006 வரை தேர்தலை தங்கள் விருப்பத்திற்கு படுத்தி எடுத்த ஒரு பிரிவினரின் செயலால் ஜனநாயகம் கேள்விக்குறியானது. இந்நிலையில் 2006ல் அன்றைய திமுக அரசின் முதல்வர் கருணாநிதியின் விருப்பத்தில், அன்றைய ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் முயற்சியில், தற்போதைய முதல்வரின் ஆலோசகரும், அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியருமான உதயச்சந்திரன் ஏற்பாட்டில் சம்மந்தப்பட்ட கிராமங்களில் தேர்தல் நடத்தப்பட்டு, தற்போது வரை அங்கு பிரச்சனையின்றி தேர்தல் நடந்து வருகிறது. அதை நினைவூட்டும் விதமாக சமீபத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் உதயச்சந்திரனுடன் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், தன்னுடைய முயற்சியால் அங்கு உள்ளாட்சி தேர்தல் நடந்ததை நினைவு கூர்ந்தார். 2006 க்கு பின் 15 ஆண்டுகளை கடந்து மீண்டும் ஒரு சம்பவம் திரும்பியுள்ளது. ஆனால் அது தென்மாவட்டத்தில் அல்ல... சென்னைக்கு மிக மிக அருகில் உள்ள வேலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. பட்டியலின பெண் ஊராட்சி தலைவர் ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு ஊராட்சியே நான்கு வகையான தேர்தலை புறக்கணித்திருக்கிறது... என்ன நடந்தது அம்முண்டி ஊராட்சியில்..? இதோ முழு தகவல்....

தொடர்ந்து எதிர்த்த மக்கள்!

மேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்டது அம்முண்டி ஊராட்சி. ஊராட்சியின் தலைவர் பதவியை பட்டியலின பெண் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது . அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதற்கு காரணம், அந்த ஊராட்சி இரு பட்டியலின பெண் வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். எனவே அதை மாற்றக்கோரி சம்மந்தப்பட்ட கிராமத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இப்போதைக்கு எதையும் மாற்ற முடியாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

ABP Nadu Exclusive: பட்டியலின பெண் ஊராட்சி தலைவர்... ஒட்டுமொத்த தேர்தலை புறக்கணித்த மக்கள்! இது நவீன பாப்பாபட்டி!

மனுத்தாக்கல் இல்லை... ஆனாலும் தேர்தல்...!

இருப்பினும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியாக கூறப்படுகிறது. அதிகாரிகளின் பதிலை தொடர்ந்து, இந்த முறை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று சம்மந்தப்பட்ட ஊராட்சி மக்கள் முடிவு செய்தனர். அதன் காரணமாக ஊராட்சி தலைவர் பதவிக்கு யாருமே வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை. ஊராட்சி தலைவர் பதவிக்கு மட்டுமல்லாமல், ஊராட்சியின் 9 வார்டுகளுக்கான உறுப்பினர் தேர்தலுக்கும் ஒருவர் கூட மனுத்தாக்கல் செய்யவில்லை. இதனால், அந்த ஊராட்சியில் தேர்தல் ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகள் தவித்தனர். இருப்பினும் ஒனறிய கவுன்சிலர், மாவட்ட வார்டு கவுன்சிலர் தேர்தல் காரணமாக, சம்மந்தப்பட்ட அம்முண்டி ஊராட்சியில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டது. 

ஆனால் முன்பு திட்டமிட்டபடி அம்முண்டி ஊராட்சியை சேர்ந்த ஒருவர் கூட வாக்களிக்க முன்வரவில்லை. அம்முண்டி ஊராட்சி தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி எண் 213 முதல் 217 வரை என மொத்தம் 5 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை.

அம்முண்டி ஊராட்சியில் உள்ள வாக்காளர்கள் விபரம்:

ஆண் வாக்காளர்கள் பெண் வாக்காளர்கள் இளம் வாக்காளர்கள் மொத்த வாக்காளர்கள்
1,012 1,033 12 2,057

ஊராட்சி பணியாளர்கள் கூட புறக்கணித்த பரிதாபம்!

ABP Nadu Exclusive: பட்டியலின பெண் ஊராட்சி தலைவர்... ஒட்டுமொத்த தேர்தலை புறக்கணித்த மக்கள்! இது நவீன பாப்பாபட்டி!

ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு தான் வாக்களிக்கவிருப்பமில்லை, ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட வார்டு கவுன்சிலர் தேர்தலில் வாக்களிக்க வருவார்கள் என்று காலையிலிருந்து காத்திருந்த அதிகாரிகளுக்கு, கடைசி வரை ஏமாற்றமே மிஞ்சியது. ஒருவர் கூட அந்த ஊராட்சியிலிருந்து வாக்களிக்க வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர், சம்மந்தப்பட்ட ஊராட்சியில் உள்ள பணியாளர்களையாவது ஓட்டளிக்க முயற்சி மேற்கொள்ளுமாறு ஒன்றிய தேர்தல் பார்வையாளரிடம் வலியுறுத்தியுள்ளார். அதன் படி கிராம ஊராட்சி தூய்மை பணியாளர்களை வாக்களிக்கச் செய்ய வருவாய் துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் ஊர் கட்டுப்பாட்டை மீறி வாக்களிக்க முன்வரவில்லை. வாக்காளிக்கவில்லை என்றால் வேலைக்கு பாதிப்பு வரும் என்றெல்லாம் வருவாய் துறையினர் மிரட்டல் விடுத்தும், அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. இதனால் அம்முண்டி ஊராட்சியின் வாக்குப்பதிவு 0 ஆனது. 

‛பதிவாக ஓட்டுப்பதிவு இயந்திரத்திற்கு சீல்’

டிஎஸ்பி.,கள் இருவர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டு, வாக்குப்பதிவை எப்படியாவது நடத்திவிடலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்த அதிகாரிகளுக்கு, அவர்களின் முயற்சி படுதோல்வி அடைந்தது. கடைசி நேரம் வரை காத்திருந்தும் ஓட்டுகள் பதிவாகாத நிலையில், பதிவாகாத ஓட்டு பதிவு இயந்திரங்களை சீல் வைத்து அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். 

புரிய வைக்க எடுத்த முயற்சி-கிராம மக்கள்!

இச்சம்பவம் குறித்து அம்முண்டி ஊராட்சியைச் சேர்ந்த மக்களிடம் ஏபிபி நாடு தொடர்பாக பேசினோம். அப்போது பேசிய அவர்கள், ‛‛ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அப்படியிருக்கும் போது, எங்கள் கோரிக்கையை அதிகாரிகள் செவி மடுக்காததால், நாங்கள் இந்த முடிவுக்கு வந்தோம். தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்பது எங்கள் முடிவல்ல. எங்கள் முடிவை ஏற்க மறுத்ததை புரிய வைக்க வேண்டும் என்பதற்காக தான் புறக்கணித்தோம்,’’ என்றனர். 

ABP Nadu Exclusive: பட்டியலின பெண் ஊராட்சி தலைவர்... ஒட்டுமொத்த தேர்தலை புறக்கணித்த மக்கள்! இது நவீன பாப்பாபட்டி!

‛அப்படியா... என பதிலளித்த தேர்தல் பொறுப்பாளர்‛

இது தொடர்பாக காட்பாடி ஒன்றிய தேர்தல் பொறுப்பாளர் திருகுணைப்பா துரையிடம் ஏபிபி நாடு சார்பில் தொடர்பு கொண்டு அம்முண்டி வாக்குப்பதிவு விவகாரம் குறித்து கேட்ட போது, ‛‛அப்படியா... அங்கு ஏதாவது பிரச்சனையா... அப்படி எதுவும் பிரச்சனை நடந்ததாக தெரியவில்லை; தற்போது வாக்குப் பெட்டிகளை பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம்... பிறகு கேட்டுச் சொல்கிறேன்,’’ என்றார். அங்கு இப்படி ஒரு பிரச்சனை இருப்பதே அவருக்கு தெரியாதது போல் தான் அவரது பதில் இருந்தது. பொறுப்பாளருக்கே இந்த விவகாரம் தெரியாதபோது, சம்மந்தப்பட்ட ஊராட்சி மக்களை யார் சமரசப்படுத்தியிருப்பார்? அவர்கள் எப்படி வாக்களித்திருப்பார்கள்? என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

5 தபால் ஓட்டு... திரும்ப வருமா...?

இந்நிலையில் சம்மந்தப்பட்ட ஊராட்சியைச் சேர்ந்த 5 பேருக்கு தேர்தல் பணியின் காரணமாக தபால் வாக்குப்பதிவிற்கான சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அது திரும்ப வந்து சேருமா... அல்லது அதுவும் வழக்கமான ஓட்டுப்பதிவுநாளில் நடந்த சம்பவம் போல வராமலேயே போகுமா என்கிற எதிர்பார்ப்பில் 12 ம் தேதி வரை அதை எதிர்பார்த்து அதிகாரிகள் காத்திருக்கின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget