தங்களின் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுங்கள் - கரூர் மாவட்ட ஆட்சியர்
தடுப்பூசி பணிக்காக 1,73,000 டோஸ் தடுப்பூசிகள், கால்நடை பராமரிப்புத்துறையின் குளிர்சாதன அறையில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்து ஆறு மாதங்களுக்கு கால்நடைகளை கோமாரி நோய் பாதிக்காமல் காப்பாற்றலாம்.
மூன்றாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி 1,72,700 இலட்சம் பசு மற்றும் எருமையினங்களுக்கு செலுத்தப்படுகிறது என கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம், புலியூர் காளிபாளையம் பகுதியில் கால்நடை பராமரிப்பித்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ் பசு மற்றும் எருமையினங்களுக்கு மூன்றாம் சுற்றாக கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும்
பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். கரூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் மூலம் கோமாரி நோய் தடுப்பூசி திட்டம் மூன்றாவது சுற்று 1,72,700 பசு மற்றும் எருமையினங்களுக்கு 75 குழுக்கள் மூலம் தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் 1,48,533 லட்சம் பசுக்களும், 24,167 எருமைகளும் என மொத்தம் 1,72,700 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி பணிகள் 01.03.2023 முதல் 21.03.2023 வரை மேற்கொள்ளப்படும். அதேபோல் விடுபட்ட கால்நடைகளுக்கு 22.03.2023 முதல் 31.03.2023 வரை தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்படும். தடுப்பூசி பணிக்காக 1,73,000 டோஸ் தடுப்பூசிகள், கால்நடை பராமரிப்புத்துறையின் குளிர்சாதன அறையில் வைக்கப்பட்டுள்ளது. எனவே கரூர் மாவட்ட கால்நடை வளர்ப்போர் தங்களுடைய பசு, எருமை, எருது மற்றும் கன்றுகளும் எவ்வித விடுபாடும் இன்றி முழுமையாக கோமாரி நோய் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தடுப்பூசி கால்நடைகளுக்கு போடப்படுவதால் அடுத்து ஆறு மாதங்களுக்கு கால்நடைகளை கோமாரி நோய் பாதிக்காமல் காப்பாற்றலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் தெரிவித்தார்.
பின்னர் கால்நடைகளைத் தாக்கும் தொற்று நோய்கள் மற்றும் தடுப்பு முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்