கரூரில் வீரமங்கை வேலு நாச்சியார் உருவப்படத்திற்கு தவெக மகளிரணி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை
வேலு நாச்சியார் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி தொண்டர் ஒருவர் கலந்து கொண்ட நிலையில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அவரை தூக்கி வந்து மாலை அணிவித்து அவரை உற்சாகமடைய செய்தனர்.
கரூரில் வீரமங்கை வேலு நாச்சியார் உருவப்படத்திற்கு மகளிரணி நிர்வாகிகள் முன்னிலையில் தவெகவினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக அதன் தலைவர் நடிகர் விஜய் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் நமது கட்சியின் அரசியல் வழிகாட்டி உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு புகழஞ்சலி மற்றும் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை தொடர்ந்து செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் ஜனவரி மூன்றாம் தேதி வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக உள்ளிட்ட பல்வேறு மாவட்ட சார்பாக அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யவும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்ட நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது அலுவலகத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தார்.
இந்நிலையில் கரூர் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக மாவட்ட தலைவர் வி பி மதியழகன் தலைமையில் கரூர் மாவட்ட தமிழக வெற்றிக்கழக மகளிர் அணியின் சார்பாக அதன் தலைவர் முன்னிலையில் இன்று சின்ன ஆண்டான் கோவில் சாலையில் உள்ள தமிழக வெற்றிக்கழக மாவட்ட அலுவலகத்தில் வீரமங்கை வேலு நாச்சியார் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதைத் தொடர்ந்து அவர் புகழஞ்சலி போற்றும் விதமாக கோஷங்கள் எழுப்பியவாறு நிகழ்ச்சி நடைபெற்றது .
இந்த நிகழ்ச்சியில் வேலு நாச்சியார் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி தொண்டர் ஒருவர் கலந்து கொண்ட நிலையில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அவரை தூக்கி வந்து மாலை அணிவித்து அவரை உற்சாகமடைய செய்தனர். இன்று நடைபெற்ற வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் மற்றும் செயலாளர் கலந்துகொண்டு வீரமங்கை வேலுநாச்சியார் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 2026 ஆம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் தேர்தலில் வெற்றி பெற பல்வேறு யூகங்கள் வகுத்து வரும் நிலையில் தற்போது அரசியல் தலைவர்கள் மற்றும் சமூகப் போராளிகளுக்கு மரியாதை செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.