“தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்)" - நெகிழி கழிவுகளை சேகரித்தல் பணியினை பார்வையிட்ட கரூர் ஆட்சியர்
“தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்)" – நெகிழி கழிவுகளை சேகரித்தல் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் த.பிரபு சங்கர், பார்வையிட்டார்.
தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், சுகாதாரம் மற்றும் தூய்மையான சுற்றுப்புறச் சூழலை உருவாக்கும் பொருட்டு தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் பணியினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், வெள்ளியணை ஊராட்சியில் ஊராட்சி பகுதிகளில் சுகாதாரம் மற்றும் தூய்மையான சுற்றுப்புறச் சூழலை உருவாக்கும் பொருட்டு தூய்மை பாரத இயக்கத்தின்கீழ் என்ற செயல்திட்டத்தின் கீழ் நெகிழி கழிவுகளை சேகரித்தல் பணியினை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், வெள்ளியணை ஊராட்சியில் நெகிழி சேகரித்தல் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், களப்பணியாளர்கள் மற்றும் அனைத்து நிலை அலுவலர்களும் கலந்து கொண்டு நெகிழிகளை சேகரித்து ஊராட்சிகளில் ஒப்படைக்க வேண்டும் என அலுவலருக்கு அறிவுறுத்தினார்.
வாகன நகர்வுகளை கண்காணிப்பதற்காக பொருத்தப்பட்ட சிபிஎஸ் கருவிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து வடக்கு ஆதிதிராவிடர் காலணியில் ரூ.9.52 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாக கட்டிடத்தை பார்வையிட்டு பயன்பாடுகள் குறித்து அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டறிந்தார். பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, வெள்ளியணை ஊராட்சி தேவேந்திரன் நகர் பகுதியில் 122 வீடுகள் உள்ளது. இதில் குறைந்த அளவே கழிப்பறைகளை பயன்படுத்துவது தெரிய வந்த அப்பகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் கழிப்பறை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பொதுமக்களாகிய நீங்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதை முற்றிலும் நிறுத்த வேண்டும். அதற்காக தனி நபர் கழிப்பறைகள் மற்றும் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியே ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் கட்டிக் கொடுக்கப்படும். மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை நாள்தோறும் பிரித்து குப்பைகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் வரும் தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். மேலும் கழிவு நீர் மேலாண்மைக்காக தேவைப்படும் வீடுகளுக்கு உறிஞ்சு குழிகள் அமைத்துக் கொடுக்கப்படும். இதன் மூலம் உங்கள் கிராமத்தை முன்மாதிரி கிராமமாக நாங்கள் உருவாக்க உள்ளோம். இதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தெரிவித்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணி ஈஸ்வரி, உதவி பொறியாளர் இளஞ்சேரன், வெள்ளியணை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/