கரூர் மாவட்டத்தில் 3 திரையரங்குகளில் வெளியான தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’
புதிய திரைப்படமான தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம், கரூர் மாவட்டத்தில் மூன்று திரையரங்குகளில் இன்று வெளியாகி உள்ளது.
கரூர் மாவட்டத்தில் மொத்தமாக ஒன்பது திரையரங்குகள் உள்ளது. அதை தவிர குளித்தலை, அரவக்குறிச்சி பகுதிகளிலும் திரையரங்குகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற ஏழு திரையரங்குகள் உள்ளன. வாரம் தோறும் புதிய திரைப்படங்கள், குறிப்பிட்ட ஏழு திரையரங்களிலே, கரூர் நகரப் பகுதியில் வெளியாகும்.
மேலும், முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விஜய் சேதுபதி, சூர்யா, கார்த்திக், தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு உள்ளிட்ட முக்கிய ஹீரோக்களின் படம் தவறாமல் ரிலீஸ் தேதியில் இடம் பெறும். இதனால் வாரம் தோறும் புதிய படங்கள் வருகையால் அனைத்து திரையரங்களிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும்.
இந்நிலையில் தொற்று காரணமாக திரையரங்குகள் மூடி இருந்தன. அதைத் தொடர்ந்து 50%, தமிழக அரசு திரையரங்குவதற்கு அனுமதி வழங்கியது. மீண்டும் தொற்று பரவல் குறைவானதால் 100 சதவீதம் இருக்கையுடன் திரைப்படங்கள் திரையிட அனுமதி வழங்கியது. அதேபோல் தொற்றின் காரணமாக, திரையில் திரையிட முடியாத திரைப்படங்கள் ஒடிடியில் வெளியானது.
மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில் வாரதோறும் வியாழக்கிழமை, புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, திரைப்படங்கள் ரிலீஸ் ஆன நிலையில் தற்போது வியாழக்கிழமை புதிய திரைப்படங்கள் திரைக்கு வருகிறது. இன்று 18.08.2022 வியாழக்கிழமை புதிய திரைப்படமான தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம், கரூர் மாவட்டத்தில் மூன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. குறிப்பாக அஜந்தா, திண்ணப்பா, அமுதா உள்ளிட்ட முக்கிய திரையரங்களில், திரைப்படம் இன்று காலை 10:00 மணி காட்சி, மதியம் 2:00 மணி காட்சி, மாலை 6:00 மணி காட்சி என மூன்று காட்சிகளாக திரைப்படம் வெளியாகி உள்ளது.
அதேபோல் கலையரங்கம், எல்லோரா திரையரங்கில் நடிகர் கார்த்தி நடித்த விரும்பன் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் கார்த்திக் நடித்த திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த வியாழக்கிழமை வெளியான நிலையில், தொடர்ந்து இரண்டாவது வாரமாக கரூர் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. அதேபோல் கடந்த வாரத்தில் வெளியான சீதாராமம் திரைப்படமும், பொன்னுமுதா திரையரங்கில் தொடர்ந்து இரண்டாவது வாரமாக வெற்றி நடை போடுகிறது. அதேபோல் கவிதாவையா திரையரங்கில் எஸ் ஜே சூர்யா நடித்த திரைப்படமும், லட்சுமி ராம் திரையரங்கில் காட்டேரி என்ற திரைப்படமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. அதேபோல் ராமா கவுண்டனூர் வெற்றி திரையரங்கம், குளித்தலை மற்றும் அரவக்குறிச்சி பகுதிகளில் திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக முக்கிய கதாநாயகன் நடிப்பில் உருவாகும் திரைப்படங்கள் மூன்று அல்லது நான்கு திரையரங்களில், கரூர் மாவட்டத்தில் உள்ள திரையரங்களின் நான்கு காட்சிகளாக ஒளிபரப்பு செய்யப்படும். இந்நிலையில் இன்று புதிய வரவாக தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம், கரூர் மாவட்டத்தில் 3 திரையரங்கில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த வாரம் புதிய வரவான தனுஷ் நடித்த, திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்கான டிக்கெட் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று வியாழன் வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட நான்கு நாட்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், சனி ஞாயிறு காட்சிகள் தற்போது 60 சதவீத இருக்கைகள் முன்பதிவு நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்