மின் விளக்கை ஆன் செய்தபோது தாக்கிய மின்சாரம் - பள்ளி மாணவர் உயிரிழப்பு
மின் விளக்கை ஆன் செய்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்தார்.
கரூர் அருகே கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் மின் விளக்கை ஆன் செய்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பிளஸ் டூ படிக்கும் பள்ளி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம் வெங்கமேடு அருகே உள்ள அருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் வயது 54. இவரது வீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. இவரது மகன் கௌசிக் வயது 17. இவர் கரூர் அடுத்த வெண்ணமலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.
நேற்று மாலை 6 மணி அளவில் கட்டுமான பணிகள் நடைபெற்ற இடத்தில் மின் விளக்கை ஆன் செய்வதற்காக வீட்டின் மாடிக்கு சென்ற கௌஷிக் மின் விளக்கை ஆன் செய்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் துடி துடித்து உயிரிழந்தார். சத்தம் கேட்டு மேலே வந்து பார்த்த சுப்பிரமணியன் தனது மகன் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு இதுகுறித்து வெங்கமேடு காவல் நிலையத்திற்கு அளித்தார். தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வெங்கமேடு காவல்துறையினர் உயிரிழந்த கௌசிக்கின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின் விளக்கை ஆன் செய்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒரே நாளில் ஐந்து பைக்குகள் திருட்டு குளித்தலை பகுதி பொதுமக்கள் அச்சம்
குளித்தலை அடுத்த குமாரமங்கலத்தை சேர்ந்தவர் ஷர்மா இவர் பைக்கில் தனது வயலுக்கு சென்று உள்ளார். அங்கு நிறுத்திவிட்டு வயல் வேலையை முடித்துவிட்டு திரும்பி வந்த பார்த்தபோது பைக்கை காணவில்லை. இது குறித்து சர்மா குளித்தலை போலீசில் புகார் அளித்துள்ளார். குளித்தலை அடுத்த சத்தியமங்கலம் ஊராட்சி தெற்கு மயில் ஆடியைச் சேர்ந்தவர் கருப்பையா விவசாயி. இவர் தனது பைக்கை கல்லுப்பட்டி பாலம் அருகி நிறுத்திவிட்டு விவசாயத் தோட்டத்திற்குச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பைக் மாயமானது தெரியவந்தது. இது குறித்து கருப்பையா குளித்தலை போலீசில் புகார் அளித்துள்ளார். இதுபோல் திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த திருப்பதி என்பவர் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். மருத்துவமனைக்கு வெளியே தனது பைக் நிறுத்திவிட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வெளியே வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை இது குறித்து திருப்பதி குளித்தலை போலீசில் புகார் அளித்துள்ளார். மூன்று பேரது புகார்களும் பெற்றுக் கொண்ட குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அதுபோலவே குளித்தலை உட்கோட்டத்திற்கு உட்பட்ட பாலவிடுதி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கடவூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சக்திவேல் என்பவர் தனது பைக்கை பேக்கரி கடை முன்பு நிறுத்தி வைத்துவிட்டு குளித்தலை வந்துள்ளார். திரும்பி சென்று பார்த்தபோது பைக் மாயமாகிவிட்டது இதேபோல் கடவூர் மேற்கு ராஜபார்ட் தெருவை சேர்ந்த பெரியண்ணன் என்கின்ற செல்வராஜ் என்பவர் தனது பைக்கை மாரியம்மன் கோவில் அருகே நிறுத்தி விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மாயமாகிவிட்டது. இது குறித்து இருவரும் அளித்த புகாரின் பேரில் பாலவிடுதி போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். குளித்தலை உட்கோட்ட பகுதிகளில் ஒரே நாளில் ஐந்து பைக்குகள் மாயமானது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது