கரூர்: அமராவதி ஆற்றில் நீர் திறப்பு குறைப்பு - வறண்டது செட்டிபாளையம் தடுப்பணை
அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால் கரூர் அருகே செட்டிபாளையம் தடுப்பணை வறண்ட நிலை காணப்படுகிறது.
அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால் கரூர் அருகே செட்டிபாளையம் தடுப்பணை வறண்ட நிலை காணப்படுகிறது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 189 கன அடி தண்ணீர் வந்தது. குடிநீர் தேவைக்காக ஆற்றில் வினாடிக்கு 40 கன அடி தண்ணீராக குறைக்கப்பட்டது.
தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் கரூர் அருகே செட்டிபாளையம் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்ட நிலையில் காட்சி அளிக்கிறது. 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம் தற்போது 52 அடியாக உள்ளது.
மாயனூர் கதவனுக்கு தண்ணீர் வரத்து நிலவரம்.
காவிரி ஆற்றில் மாயனூர் கதவனுக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 825 கன அடி தண்ணீர் வந்தது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 576 கன அடி தண்ணீராக உள்ளது. நேற்று விட இன்று காலை நிலவரப்படி 230 கன அடி தண்ணீர் குறைவாக வந்தது. அந்தத் தண்ணீர் முழுவதும் காவிரி ஆறு மற்றும் நான்கு பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
நங்காஞ்சி அணையின் தண்ணீர் வரத்து நிலவரம்.
திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதியில் மழை இல்லாததால் நங்காஞ்சி ஆற்றிற்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட நங்காஞ்சி அணையின் நீர்மட்டம் தற்போது 38.84 கனடியாக உள்ளது. ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் அணைப்பகுதியில் ஆறு மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
ஆத்துப்பாளையம் அணை தண்ணீர் வரத்து நிலவரம்.
க.பரமத்தி, அருகே உள்ள கார்விழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 13.90 அடி உயரமாக உள்ளது. மேலும், நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆத்துப்பாளையம் அணைப்பகுதியில் 4.2 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வரும் நிலையில் கரூர் மாவட்டத்திலும் சில இடங்களில் கனமழையும் சில இடங்களில் சாரல் மலையும் பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தண்ணீர் வரத்து தற்போது குறைவாக இருப்பதால் பாசன விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் இன்று மழையின் அளவை மாவட்ட நிர்வாகம் புள்ளி விவரத்துடன் தெரிவித்துள்ளனர்.
அதன்படி கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் 04.00 மில்லி மீட்டாகவும், ஆத்துப்பாளையத்தில் 10.0 மில்லி மீட்டராகவும், குளித்தலையில் 26.00 மில்லி மீட்டராகவும், இச்சம்பட்டியில் 3.6 மில்லி மீட்டராகவும், மழையின் அளவு பதிவாகியுள்ளன மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி 43.60 மில்லி மீட்டர் மழையின் அளவு பதிவாகியுள்ளது. இதன் சராசரி 03.66 மில்லி மீட்டர் ஆகும்.