சுதந்திர தினம்: கரூர் ரயில் நிலையத்தில் மெட்டல் டிடெக்டர் மூலம் போலீஸ் சோதனை
கோவை முதல் நாகர்கோவில் செல்லும் பயணிகள் ரயிலில் ரயில்வே பாதுகாப்பு போலீசார் ஏறி பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.
நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கரூர் ரயில் நிலையத்தில் நடைமேடை, ஆட்டோக்கள், இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்கள், பார்சல் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ரயில்வே பாதுகாப்பு போலீசாரும், இரும்புப் பாதை காவல் நிலைய போலீசாரும் இணைந்து மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.
மேலும், ரயில் நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளின் உடைமைகளையும் சோதனையிட்டனர். மேலும், கோவை முதல் நாகர்கோவில் செல்லும் பயணிகள் ரயிலில் ரயில்வே பாதுகாப்பு போலீசார் ஏறி பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.
76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூரில் வெடிகுண்டு நிபுணர்கள் கரூர் பேருந்து நிலையம் சுற்றுவட்டார பகுதியில் சோதனை.
இந்தியா முழுவதும் 77 வது சுதந்திர தினத்தை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாவட்ட காவல்துறையினர் இன்று கரூர் பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் பேருந்துகளில் ஏறி மெட்டல் டிடெக்டர் பயணிகள் கொண்டு வரும் பைகளில் பரிசோதனை செய்து மூட்டைகள் மற்றும் காய்கறி மூட்டைகள் பார்சல் போன்ற பரிசோதனை மேற்கொண்டனர். கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட வாகனத்தை மூலம் பேருந்து நிலையம் அதிகமாக கூட்டம் கூடும் பகுதிகளில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. காவல் உதவி ஆய்வாளர் மனோகரன் மற்றும் தலைமை காவலர் ரமேஷ் .தியாகு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.