Karur: உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு - கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் கைது
உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர் ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயி 25 நபர் கைது.
உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர் ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயி 25 நபர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டத்தில் ஆண்டிசெட்டிபாளையம் முதல் கூனம்பட்டி கரைத்தோட்டம் வரையிலான 110 KV உயர்மின் கோபுர மின் திட்டத்தை அமைப்பதற்கு அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் புகளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உயர்ந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த இன்று விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் காத்திருப்பு போராட்டத்திற்கு அனுமதி அளிக்காத காவல்துறையினர்,முன்கூட்டியே போராட்டத்தில் ஈடுபடும் ஐந்து நபர்களை காவல்துறை கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து ஆவேசம் அடைந்த விவசாயிகள் கரூர் ஆர்டிஓ அலுவலகத்திற்கு 25-க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டம் நடத்த சென்ற ஆண் மற்றும் பெண் விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.
விவசாய நிலங்களை பாதிக்கும் உயர்மின் கோபுரங்களை அமைக்கும் திட்டத்தை கைவிட கோரி முற்றுகையிட வந்த விவசாயிகளை கைது செய்த சம்பவம் கரூரில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்