அமராவதி அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் வறண்டது தடுப்பணை
கரூர் அருகே, பெரிய ஆண்டாள் கோவில் தடுப்பணை வறண்ட நிலையில் உள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு நிலவரப்படி வினாடிக்கு தண்ணீர் வரத்து, 259 கன அடியாக இருந்தது.
அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால் கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை வறண்ட நிலையில் உள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு நிலவரப்படி வினாடிக்கு தண்ணீர் வரத்து, 259 கன அடியாக இருந்தது. அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட,100 கனஅடி தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால், கரூர் அருகே பெரிய ஆண்டாள் கோயில் தடுப்பணை பகுதியில் வறண்ட நிலையில் உள்ளது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிக நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி கொண்ட அமராவதி அணை நீர்மட்டம், 67.06 அடியாக இருந்தது.
மாயனூர் கதவணை:
கரூர் அருகே, மாயனூர் கதவணை நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 1,085 கனஅடியாக இருந்தது. அந்த தண்ணீர் முழுவதும் டெல்டா பாசன பகுதிக்காக காவேரி ஆற்றில் திறக்கப்பட்டது. கீழ்கட்டளை வாய்க்கால், தென்கரை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
நங்காஞ்சி அணை நிலவரம்
திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால் நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து, இல்லை .39.37 அடி உயரம் கொண்ட நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது, 28.15 அடியாகஉள்ளது.
மழை நிலவரம்
கரூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அரவக்குறிச்சி, 9.4 மி. மீ., க பரமத்தி, 27 மி. மீ., மழை பெய்துள்ளது.