(Source: ECI/ABP News/ABP Majha)
கரூர் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
கரூரில் 32.60 மில்லி மீட்டர் மழை பெய்தது. மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 672 கன அடி தண்ணீர் வந்தது. கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது .
மாயனூர் கதவனைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
மாயனூர் கதவனைக்கு நேற்று தண்ணீர் வரத்து அதிகரித்தது. கரூரில் 32.60 மில்லி மீட்டர் மழை பெய்தது. கரூர் அருகே மாயனூர் கதவனைக்கு நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 672 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு 2272 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுவதும் காவிரி ஆற்றில் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டது. கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது .
அமராவதி அணை
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு தண்ணீர் வரத்து 195 கன அடியாக இருந்தது. அமராவதி ஆறு மற்றும் புதிய பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 65.49 அடியாக இருந்தது.
நங்கஞ்சி அணை நிலவரம்
திண்டுக்கல் மாவட்டம் வடக்காடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால் நங்கஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட நங்கஞ்சி அணையின் நீர்மட்டம் தற்போது 28.67 அடியாக உள்ளது, நங்கஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஆட்டுப்பாளையம் அணை கா. பரமத்தி அருகே கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்க நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி அனைத்து தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 12.49 அடியாக இருந்ததால் நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மழை நிலவரம்
கரூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை கடந்து 24 மணி நேரத்தில் கரூரில் மட்டும் 32.60 மில்லி மீட்டர் மழை பெய்தது.