கரூர் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது
டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், 13 ஆயிரத்து, 131 கன அடி தண்ணீரும், நான்கு வாய்க்காலில், 1,120 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில், மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்தது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, 14 ஆயிரத்து, 769 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 14 ஆயிரத்து, 251 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், 13 ஆயிரத்து, 131 கன அடி தண்ணீரும், நான்கு வாய்க்காலில், 1,120 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 462 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கரூர் அருகே பெரியாண்டாங் கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 132 கன அடி தண்ணீர் வந்தது. புதிய பாசன வாய்க்காலில், 440 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஷட்டர்கள் மூலம், 9 கன அடி தண்ணீர் வெளியேறியது. 90 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 87.90 அடியாக இருந்தது.
திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு, வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், காலை நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம் 33 கன அடியாக இருந்தது.
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு, தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 25.71 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மழை நிலவரம்
கரூர் மாவட்டத்தில் காலை 8:00 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு அணைப்பாளையம், 18, குளித்தலை, 7, அரவக்குறிச்சி, 6, பஞ்சப்பட்டி, 2 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 2.77 மி.மீ., மழை பதிவானது.