மேலும் அறிய

Karur: கந்துவட்டி கொடுமை...கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற குடும்பம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கந்துவட்டி கொடுமை காரணமாக தனது மனைவி மற்றும் மகனுடன் சேர்ந்து தீக்குளிக்க முயன்றார். தீயணைப்பு வீரர்களும்  போலீசாரும் அவர்களை தடுத்து மீட்டனர்.

கந்துவட்டி கொடுமையால் கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.

Karur: கந்துவட்டி கொடுமை...கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற குடும்பம்

கரூர் மாவட்டம்,கடவூர் வட்டம் சின்னாம்பட்டி அஞ்சல் மாவத்தூர் கிராமம், களுத்தரிக்கப்பட்டியை சேர்ந்த நல்ல சிவம் என்பவர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கந்துவட்டி கொடுமை காரணமாக தனது மனைவி மற்றும் மகனுடன் சேர்ந்து மன்னனை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.தீயணைப்பு வீரர்களும்  போலீசாரும் அவர்களை தடுத்து மீட்டனர்.

மக்கள் குறைதீர்க்கும்  முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் நல்லசிவம் அளித்த மனுவில்..

என் குடும்பவாழ்வாதரத்தை சிதைத்து வாழ வழியில்லா நிலையை உருவாக்கி 20 இலட்சம் வட்டி மட்டுமே செலுத்தி ஆறு ஆண்டுகள் விவசாயம் செய்து ஈட்டிய தொகை மோகனுக்கு வட்டி மட்டுமே செலுத்தி என் குடும்ப உழைப்பை வீணடித்து விட்ட நிலையில், கோவை மாவட்டத்தை சேர்ந்த கந்தசாமி மகன் மோகன் மற்றும் அவர்களின் வக்கீல் அகஸ்டின், வெள்ளசாமி, இடும்பன் இவரது மனைவி பத்மா அவர்களால் என் குடும்பம் இன்று தீக்குளித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உயிரை மாய்த்து கொள்வோம். உயிர்பலிக்கு காரணம் இவர்கள்தான் என்பதும் காவல்துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலக அலட்சியமே காரணம்.

Karur: கந்துவட்டி கொடுமை...கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற குடும்பம் 

எங்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களை, என் குடும்ப சூழ்நிலை காரணமாக எனது தாயார் அண்ணன் ஆகியோர் மனநலம் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமமான குழலில் அவர்களை, பராமரிக்க விவசாய நிலத்தின் மீது கடன் வாங்கினேன். என் சகோதரர் மருதை வீட்டைவிட்டு வெளியேறி எங்கு இருக்கிறார் என்று தெரியாத நிலையில்  கோவை கந்தசாமி மகன் மோகன் என்பவரிடம் ரூ.12.00000 (பன்னிரெண்டு இலட்சம் ) கடன் வாங்கினேன். இக்கடனுக்கு மாதந்தோறும் வட்டி ரூ.24000/- (இருபத்தி நான்காயிரம் வீதம் 25.10.2017ல் இருந்து வட்டி செலுத்தியும் அவரிடம் பெற்ற கடன் தொகைக்கு ஆதரமாக விவசாய நிலங்களை மோகன் மற்றும் அவரது பினாமி தங்கராஜ் ஆகியோர் பெயரில் கிரய ஆவணமாக தரகம்பட்டி சார்பதிவு அலுவலகத்தில் ஆவண பதிவு செய்து கொடுத்தேன். இந்த விவசாய நிலங்களை நானே என் சொந்த செலவில் நானே விவசாயம் செய்து வருகிறேன். இந்நிலையில் மோகன் அசல் தொகை கேட்டு மிகுந்த மன உளைச்சல் கொடுத்தும், கரூர் மாவட்டம், தாந்தோணி ஒன்றியம் காளியப்பனூர் என்ற முகவரியில் சட்ட அலுவலகம் வைத்துள்ள அகஸ்டின்  என்பவர் அத்துமீறி விவசாய நிலத்துக்குள் அடியாட்களுடன் வந்து மிரட்டுவதும், நான் உனது இடத்தை பவர் வாங்கி விட்டேன்.

எவனுக்கு வேண்டுமானாலும் வித்து காசு ஆக்குவேன் தோட்டத்துக்குள் நான் வரும் போது இருந்தால் குடும்பத்தை காலி செய்து விடுவேன் என்று மிரட்டினார். நான் அவரிடமும் மோகனிடமும் கடந்த 16.05.2023 ல் கரூர் காளியப்பனூர் அகஸ்டின் வக்கீல் அலுவலகத்தில் நான் எனது மாமனார், என் நண்பர் மும்மூர்த்தி ஆகியோர் மோகன் வர சொல்லி சென்றோம். அப்போது மோகனிடம் என் குடும்ப நிலையை சொல்லி தொடர்ந்து என் தாயார், எனது அக்கா தங்கம்மா இறந்து விட்டனர். அதனால் எனக்கு 6 மாதம் அவகாசம் 2024 ஜனவரி வரை கேட்டோம் வக்கீல் உட்பட மோகன் சகோதரியின் கணவர் உடன் இருக்க எனக்கு 6 மாதம் அவகாசம் கொடுத்தார். இந்நிலையில் 17.05.2023ல் மோகன், வெள்ளச்சாமி என்பவருக்கு பவர் ஆவணம் கொடுத்து மோகன், வெள்ளசாமி இருவரும் 18.05.2023ல் கடவூர் வட்டம், பாலவிடுதி கிராமம், அத்திகுளத்துப்பட்டி இடும்பன் மனைவி பத்மா என்பவர் கிரயம் பெற்றுள்ளார். இடும்பன் ஆட்களை திரட்டி வந்து இன்று 01.06.2023 காலை என் வீட்டுக்கு வந்து தோட்டத்தை நில அளவை செய்ய உள்ளேன். தோட்டத்துக்குள் வந்தால், நில அளவையை தடுத்தால் வெட்டி புதைத்து விடுவேன் என மிரட்டி இன்று நில அளவை செய்ய உள்ளார்.என் குடும்ப உயிர் பலிக்கு போக வக்கீல் அகஸ்டின், வெள்ளசாமி, இடும்பனி எ மோகன் ஆகியோர் காரணம் .

Karur: கந்துவட்டி கொடுமை...கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற குடும்பம்

 தீக்குளித்து சாவதை தவிர வேறு வழி இல்லை என் வாழ்வாதாத்தை சிதைத்தவர்கள் மீது லட்ச ரூபாய் வட்டி செலுத்தியுள்ளேன் என்பதால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய்  புகார் செய்கிறேன். மோகனுக்கு சுமார் 20 இலட்சம் வட்டி தொகை செலுத்தியுள்ளேன். கரூர் காந்திகிராமத்தில் பழமுதிர்சோலை வியாபாரி கடையில் வட்டி வரவு செலவு பார்த்தோம். அவரை அடையாளம் தெரியும், இவருடன் சாட்சி அ.மும்மூர்த்தியும் உடன் இருந்தார் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Selvaraj MP: காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Rasipalan: இன்று திங்கள்! எந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் ஜாலியான நாள் தெரியுமா? முழு ராசிபலன்கள்
Rasipalan: இன்று திங்கள்! எந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் ஜாலியான நாள் தெரியுமா? முழு ராசிபலன்கள்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Selvaraj MP: காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Rasipalan: இன்று திங்கள்! எந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் ஜாலியான நாள் தெரியுமா? முழு ராசிபலன்கள்
Rasipalan: இன்று திங்கள்! எந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் ஜாலியான நாள் தெரியுமா? முழு ராசிபலன்கள்
சாதியை சொல்லி முடி வெட்ட மறுப்பு! தந்தை, மகனை உள்ளே தள்ளிய போலீஸ் - தருமபுரியில் பரபரப்பு
சாதியை சொல்லி முடி வெட்ட மறுப்பு! தந்தை, மகனை உள்ளே தள்ளிய போலீஸ் - தருமபுரியில் பரபரப்பு
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Embed widget