கரூர்: கடந்த 2 ஆண்டுகளாக அதிகமான மழை பெய்தும் நிரம்பாத குளங்கள்
கரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை மற்றும் கோடை மழை வழக்கத்தை விட அதிகமாக பெய்த போதிலும், மாவட்டத்தில் உள்ள முக்கிய குளங்கள் ஏரிகள் நிரம்பாமல் உள்ளது.
2 ஆண்டுகளாக அதிகமான மழை பெய்தும் நிரம்பாத குளங்கள்.
கரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவ மழை மற்றும் கோடை மழை வழக்கத்தை விட அதிகமாக பெய்த போதிலும், மாவட்டத்தில் உள்ள முக்கிய குளங்கள் ஏரிகள் நிரம்பாமல் உள்ளது. இயற்கையின் வரப் பிரசாதமாக தற்போது காவிரி, அமராவதி ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கெடுத்து நடப்பாண்டில் இதுவரை 200 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. இன்னும் சுமார் மூன்று மாதங்கள் பருவமழை பெய்ய இருப்பதால், இன்னும் ஏராளமான உபரி மழையின் நீர் கடலில் வீணாக கலக்கும். இதை முறையாக வறட்சி பகுதியில் பயன்படுத்தினால், நூற்றுக்கணக்கான ஏரி, குளங்கள் நிரம்பும் இலட்சக்கணக்கான நிலங்கள் பாசனம் பெறும். கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள். நாட்டின் பொருளாதாரம் மேம்படும். இதனை ஒன்றிய மாநில அரசுகள் உடனடி கவனம் செலுத்த வேண்டும்.
உதாரணமாக கரூர் மாவட்டத்தில் பெரிய குளங்கள் ஆன வெள்ளியணை, பஞ்சப்பட்டி, ஜெகதாபி, பெரிய தாதம்பாளையம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள ஒவ்வொரு குளமும் சுமார் 300 ஏக்கர் முதல் 500 ஏக்கர் வரை நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த நான்கு குளங்களிலும் தூர்வாரினால் தெற்கு பகுதிகளிலும் தாந்தோணி, கிருஷ்ணராயபுரம், கடவூர், தோகைமலை ஆகிய பகுதியில் பெருவாரியான மானாவாரி தரிசு நிலங்கள் ஐம்பதாயிரம் ஏக்கர் வரை பாசன வசதி பெறுவதுடன், லட்சக்கணக்கான விவசாயிகள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பயன்பெறுவதுடன் தலா வருமானம், நாட்டு வருமானம் உயர காரணமாக அமையும். மேலும், வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதுடன், சமூகத்தில் நடைபெறக்கூடிய குற்றச் சம்பவங்கள் தேவையற்ற கெட்ட பழக்க வழக்கங்கள் குறைய வாய்ப்பு அதிகம்.
மேலும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சென்ற ஆண்டு தமிழகம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எம்.எல்.ஏ சிவகாமசுந்தரி, கலெக்டர் பிரபுசங்கர் ஆகியோர்களிடம் ஊராட்சி மன்ற தலைவர்கள் வெள்ளியணை சுப்பிரமணியன், ஜெகதாபி ராஜேந்திரன் எடுத்துக் கூறி சென்ற ஆண்டு குடகனாறு நீரால் வெள்ளியணை குளம் 25 சதவீதம் நீர் நிரம்பியது. இதைக் கொண்டு கடந்த பத்து மாதங்களாக தான்தோன்றி, கிருஷ்ணராயபுரம், கடவூர், தோகைமலை பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் நிகழ் மற்றும் பூ வகைகள், எண்ணெய் வித்துக்கள், தரிசு நிலங்களில் பயிர் செய்து தங்கள் வருகையை பெருக்கினர். காவிரி ஆற்றின் திண்டுக்கல் மாவட்ட பகுதி மக்களுக்கும், ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
இதேபோல், மாவட்டத்தில் உள்ள வெள்ளியணை குளத்திற்கு தண்ணீர் நிரப்பினால் 1/2 டி.எம்.சி தண்ணீர் குழாய், குளம் முழுமையாக நிரப்பப்படும். இந்த தண்ணீரை கொண்டு விவசாயம் நன்கு செய்ய முடியும். மேலும், ராட்சத குழாய் மூலம் தண்ணீர் இருப்பதற்கு தேவையான மின் கட்டண செலவையும், தரிசு நிலங்களை பயிர் செய்யும் விவசாயிகள் தாங்கள் பயிர் செய்யும் நிலத்திற்கு ஏற்றார் போல, கட்டணமாக செலுத்த தயாராக உள்ளனர். இதை கருத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும். தற்போது உள்ள மழைக்காலத்தில் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியாது. இருப்பினும் கூட வரும் காலத்தில், இதனை துரிதமாக செயல்படுத்த வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது விவசாயிகளின் நலனில் தனி அக்கறையுடன் செயல்படும். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கரூர் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.